சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரப்பன் தலைமறைவு: போலீஸ் தேடுதல் வேட்டை

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (54)
Share
Advertisement
காரப்பன்,தலைமறைவு,போலீஸ்,தேடுதல் வேட்டை,dinamalar,தினமலர்

கோவை: ஹிந்து கடவுள்களை இழிவாக பேசிய, சிறுமுகை காரப்பன் மீது, போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததால், அவர் தலைமறைவானார்.

கோவை, பீளமேட்டில், 29ல், திராவிடர் இயக்கத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற, சிறுமுகை காரப்பன் என்பவர், ஹிந்து கடவுள்களான கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து இழிவாக பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர், போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறுமுகை மற்றும் பீளமேடு காவல் நிலையங்களில், புகார் அளித்தனர்.


latest tamil news



மத கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது ஆகிய பிரிவுகளில், பீளமேடு போலீசார், காரப்பன் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காரப்பன், தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்ய, தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பீளமேடு போலீசார் கூறுகையில், 'தலைமறைவான காரப்பனை, விரைவில், கைது செய்வோம்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
25-அக்-201918:53:52 IST Report Abuse
oce சில்க் கடையை ஜப்தி செய்தால் ஆள் தானாக வந்து சரண்டைவார்.
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
25-அக்-201906:16:28 IST Report Abuse
Babu தொடர்ந்து செய்தி வெளியிட்டு மத உணர்வை வளர்ப்பது சரி.
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
24-அக்-201922:36:20 IST Report Abuse
Arasu காரப்பன் பேசியதில் தவறு ஒன்றும் இல்லையே...
Rate this:
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
27-அக்-201904:34:02 IST Report Abuse
Varatharaajan Rangaswamyநமது நாட்டின் ஹிந்துக்கள் கடவுளாக வழிபடும் கிருஷ்ணரை தரக்குறைவாக விமர்சித்ததை காவல்துறை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது தனிப்பட்ட கருத்து மற்றவர்களுடைய மனங்களை புண்படுத்தினால் கட்டாயம் சமுதாயத்தில் கொந்தளிப்பு ஏற்படும். எவ்வளவோ கருத்துக்கள் வெளிப்படையாக சொல்ல தடை இருப்பதை போலவே நமது நாட்டின் பெருவாரியான மக்கள் வழிபடும் தெய்வங்களை கிண்டல், கேலி, தரக்குறைவான விமர்சனம் ஆகியவை கடும் தண்டனைகள் உள்ள குற்றங்களாக கருதப்பட வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X