பா.ஜ.,வில் சேருகிறாரா சித்து?

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (17)
Advertisement

அமிர்தசரஸ்: பஞ்சாப் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பா.ஜ.வில் சேரப் போகிறார் என வெளியாகியுள்ள தகவலை வதந்தி என அவரது மனைவி நவ்ஜோத் கவுர் மறுத்துள்ளார்.







போர்க்கொடி:


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து 55 கடந்த 2004ல் பா.ஜ.வில் சேர்ந்தார். இவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதி எம்.பி.யாக 2004 மற்றும் 2009 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2016ல் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக சித்துவை பா.ஜ. நியமித்தது. ஆனால் இதை ஏற்க மறுத்த சித்து பா.ஜ.வில் இருந்து விலகினார். அவரது மனைவி நவ்ஜோத் கவுர் சித்துவும் பா.ஜ.வில் இருந்து விலகினார்.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் 2017ல் நடந்தது. அதற்கு முன் காங்கிரசில் சேர்ந்தார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங். வெற்றி பெற்ற தையடுத்து துணை முதல்வராக சித்து நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த சித்து முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். கடந்த ஏப்ரல் - மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் சித்துவின் துறையை முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றினார். 'சித்து சிறப்பாக செயல்படவில்லை; அதனால் தான் துறை மாற்றப்பட்டது' என தகவல்கள் வெளியாகின.






விலகல்:


இதனால் கோபம் அடைந்த சித்து 'டுவிட்டர்' சமூக வலைதளம் வாயிலாக அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன்பின் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் சித்து மவுனமாக இருந்து வருகிறார். இதற்கிடையில் லோக்சபா தேர்தலில் சண்டிகர் அல்லது அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட சித்துவின் மனைவி கவுர் விரும்பினார். ஆனால் காங்கிரஸ் 'சீட்' வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த சித்துவின் மனைவி காங்கிரசிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.


வதந்தி:


இது பற்றி அமிர்தசரசில் அவர் கூறியதாவது: காங்கிரசிலிருந்து நான் விலகி விட்டேன். நான் இப்போது எந்த கட்சியிலும் இல்லை. சமூக சேவையில் கவனம் செலுத்தப் போகிறேன். என் கணவர் சித்து பா.ஜ.வில் சேரப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் வெறும் வதந்தி தான். அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. முதல்வர் அமரீந்தர் சிங்குடன் அவருக்கு நல்ல உறவு உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர்ந்து பணியாற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Chennai,இந்தியா
24-அக்-201917:17:52 IST Report Abuse
KavikumarRam அப்படியே இவர் திரும்ப பாஜகவில் சேர வந்தாலும் இவரை சேர்க்காமல் இருப்பது பாஜகவுக்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
24-அக்-201915:33:10 IST Report Abuse
இந்தியன் kumar குழப்பவாதிகள் வந்தால் குழப்பம் தான் மிஞ்சும்.
Rate this:
Share this comment
Cancel
24-அக்-201912:34:08 IST Report Abuse
Ganesan Madurai இன்னொரு ராம்தாஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X