மீண்டும் பா.ஜ., ஆட்சி? சூடு பறக்குது 'பெட்டிங்'

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை முன்வைத்து சூதாட்டமும் சூடுபறக்கிறது.



latest tamil news



இந்த இரு மாநிலங்களிலும் அக். 21ல் சட்டசபை தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் 63 சதவீதமும் ஹரியானாவில் 65 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. இன்று(அக்.,24) ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. லோக்சபா தேர்தலுக்குப் பிறகுமுதல் முறையாக நடைபெறும்சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இந்த இரு மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இரு மாநிலங்களிலும் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கே வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். இரு மாநில சட்டசபை தேர்தலை முன் வைத்து நாடு முழுவதும் சூதாட்டங்களும் அரங்கேறி உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியமைக்கப் போவது எந்த கட்சி என்றும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் பெட்டிங் சூடு பறக்கிறது.


latest tamil news



இதை தவிர உத்தர பிரதேசத்தில் 11; குஜராத்தில்ஆறு; கேரளா மற்றும் பீஹாரில் தலா ஐந்து; பஞ்சாப் மற்றும் அசாமில் தலா நான்கு; சிக்கிமில் மூன்று; ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா இரண்டு;அருணாச்சல பிரதேசம், ம.பி., ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு சட்டசபை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள சதாரா லோக்சபா தொகுதி மற்றும் பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. இத்தொகுதிகளின் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
24-அக்-201909:52:57 IST Report Abuse
G.Prabakaran என்னுடைய கமென்டிற்கு பிஜேபி சொம்புகளின் கோவம் மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை எப்போதும் சுடும் அது சுட்டிருக்கிறது. எனக்கு பிஜேபி ஜெயித்தாலும் மகிழ்ச்சி இல்லை காங்கிரஸ் தோற்றாலும் வருத்தமில்லை. வெறும் விமர்சகனாக இருப்பதே சுதந்திரம். எனக்கு இந்த விஷயத்தில் சோ அவர்கள் குரு.
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201909:26:45 IST Report Abuse
RM படுத்துக்கிட்டே அலட்டாம ப.ஜ.க. தான் ஜெயிக்கும். ஆனால் அது வெற்றியில் சே ர்த்தியில்ல.காங்கிரஸ் ஓட்டுசதவீதம் அதிகரித்தால் கூட , அதற்கு வெற்றிதான்
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-அக்-201909:26:34 IST Report Abuse
RM சரியான" எதிர்த்தலைமையில்ல. மதத்துவேஷம்,ஈ.வி.எம் கையில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X