Bookies place Maharashtra, Haryana election bets on BJP | மீண்டும் பா.ஜ., ஆட்சி? சூடு பறக்குது பெட்டிங்| Dinamalar

மீண்டும் பா.ஜ., ஆட்சி? சூடு பறக்குது 'பெட்டிங்'

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (13)

புதுடில்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை முன்வைத்து சூதாட்டமும் சூடுபறக்கிறது.






இந்த இரு மாநிலங்களிலும் அக். 21ல் சட்டசபை தேர்தல் நடந்தது. மஹாராஷ்டிராவில் 63 சதவீதமும் ஹரியானாவில் 65 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகின. இன்று(அக்.,24) ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. லோக்சபா தேர்தலுக்குப் பிறகுமுதல் முறையாக நடைபெறும்சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இந்த இரு மாநிலங்களில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இரு மாநிலங்களிலும் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கே வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளதால் அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். இரு மாநில சட்டசபை தேர்தலை முன் வைத்து நாடு முழுவதும் சூதாட்டங்களும் அரங்கேறி உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியமைக்கப் போவது எந்த கட்சி என்றும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் பெட்டிங் சூடு பறக்கிறது.





இதை தவிர உத்தர பிரதேசத்தில் 11; குஜராத்தில்ஆறு; கேரளா மற்றும் பீஹாரில் தலா ஐந்து; பஞ்சாப் மற்றும் அசாமில் தலா நான்கு; சிக்கிமில் மூன்று; ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா இரண்டு;அருணாச்சல பிரதேசம், ம.பி., ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு சட்டசபை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் உள்ள சதாரா லோக்சபா தொகுதி மற்றும் பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்துள்ளது. இத்தொகுதிகளின் முடிவுகளும் இன்று வெளியாக உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X