தேர்தல் முடிவு: திமுக - அதிமுக ஆர்வம் காட்டுவது ஏன்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிவு: திமுக - அதிமுக ஆர்வம் காட்டுவது ஏன்?

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (7)
Share
சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் முடிவுகளை தி.மு.க. - அ.தி.மு.க.,வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.இடைத்தேர்தல் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று(அக்.,24) வெளியாகின்றன. விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொகுதிகளின் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலை

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் முடிவுகளை தி.மு.க. - அ.தி.மு.க.,வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.



latest tamil news



இடைத்தேர்தல் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் இன்று(அக்.,24) வெளியாகின்றன. விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொகுதிகளின் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலை உறுதி செய்யும் என்பதால் தேர்தல் முடிவை தி.மு.க. - அ.தி.மு.க.வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் நடந்த வேலுார் லோக்சபா தேர்தலில் நுாலிழையில் வெற்றியை ருசித்தது. எனவே இத்தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியும் என்பதால் தி.மு.க. பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.


latest tamil news



இரு தொகுதிகளிலும் வெற்றி பெற அ.தி.மு.க. அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதில் கிடைக்கும் வெற்றி உள்ளாட்சி தேர்தலில் உதவியாக இருக்கும் என்பதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க. தலைமை தேர்தல் முடிவை எதிர்நோக்கி உள்ளது.

அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் உறவை நீடிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்காக இடைத்தேர்தல் முடிவை எதிர்பார்க்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X