சிதம்பரம் ஜாமின் நவ., 4க்கு ஒத்திவைப்பு

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி: 'ஐ.என்.எக்ஸ். மீடியா' ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் ஜாமின் கேட்டு காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நவ., 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.






மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு முந்தைய காங். ஆட்சியின்போது 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் அனுமதி அளித்தார். அதில் பல மோசடிகள் நடந்துள்ளதாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து சி.பி.ஐ. விசாரித்தது. அதைத் தொடர்ந்து அவர் டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்றுடன் (அக்.,24) முடிகிறது. இதன்படி இன்று நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.





இந்த நிலையில் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதையடுத்து அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் கேட்டு சிதம்பரம் சார்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நவ., 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-அக்-201903:35:48 IST Report Abuse
J.V. Iyer எதற்கு வீண் சிரமம் ஒரேயடியாக 2030 க்கு ஒத்திவையுங்க. எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
24-அக்-201921:42:15 IST Report Abuse
Muraleedharan.M அட மோடி ஆட் சியல் கலைஞ்சர் இருந்தால், எங்கு இருப்பார். சிறையஇல் இருப்பார்
Rate this:
Share this comment
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
24-அக்-201920:50:02 IST Report Abuse
Muraleedharan.M ஹலோ கோபால் அது என்ன தலை தீபாவளி .மனஷனுக்கு வயது 75
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X