வாரணாசியில் பிரதமர் மோடி தீபாவளி விருந்து

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி: தன் சொந்த தொகுதியான வாரணாசியில், பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுடன் நேரில் உரையாடி, அவர்களுக்கு தீபாவளி விருந்து அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.






உத்தர பிரதேசத்தில், பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து, இங்குள்ள அயோத்தி நகரில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை, பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, தன் தொகுதியான வாரணாசியில், இன்று(அக்.,24) பா.ஜ., நிர்வாகிகளுடன் தீபாவளியை கொண்டாட திட்டமிட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், வாரணாசி தொகுதியில் இருந்து, 4.20 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், இரண்டாவது முறை, எம்.பி.,யாக தேர்வாகியுள்ள பிரதமரால், தன் அலுவல்கள் காரணமாக, அங்கு அடிக்கடி செல்ல முடியவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, 'இன்று, என் தொகுதியான வாரணாசியில், பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து, உரையாட திட்டமிட்டுள்ளேன். என்னிடம் கேட்க, கேள்விகள் அல்லது தகவல்கள் இருப்பின், அவற்றை, 'நமோ ஆப்' மூலமாக தெரியப்படுத்தவும்' என மோடி, 'டுவிட்டரில்' குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, 'தீப உற்சவம், மோடிஜியுடன் தொண்டர்கள் விருந்து' என, பெயரிடப்பட்டுள்ளது. இன்று மாலை, 4:30 மணியளவில், இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.





பிரதமர் வாரணாசி செல்லும் இதே நாளில் தான், மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடு முழுவதும், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள் ஆகியவற்றின் முடிவுகள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-அக்-201921:46:52 IST Report Abuse
ஆப்பு அடப் போங்கய்யா... பசுக்களே நான் வெஜ்தான் விரும்பி சாப்புடுதாம்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
24-அக்-201909:19:01 IST Report Abuse
Natarajan Ramanathan எந்த விருந்து என்றாலும் இந்தியாவில் சுவையான சைவ உணவுகளே சாப்பிடும் வழக்கம் இருந்தது. அதில் அசைவத்தை புகுத்தி நாசம் செய்தது கான்+கிராஸ் திராவிஷ கட்சிகளே. இனியாவது அரசு சார்பில் கொடுக்கப்படும் விருந்துகளில் சைவ உணவு மட்டுமே கொடுக்கப்படணும்
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
24-அக்-201911:28:36 IST Report Abuse
மணி99% மக்கள் கறி கோழி காடை கவுதாரி மீன் முட்டை கருவாடு நண்டு நத்தை புறா சுறா அப்படின்னு எல்லாத்தையும் சாப்பிட்றவங்க. உங்க மீதமுள்ள ஒரு % அசைவத்துக்கு மாறிடுறதுதான் சரி....
Rate this:
Share this comment
vasanthan - Moscow,ரஷ்யா
24-அக்-201916:35:10 IST Report Abuse
vasanthanநீ உண்மையா சொல்லு ஓசி பிரியாணி மணி தானே?...
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
24-அக்-201907:50:38 IST Report Abuse
மணி இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளதாம். அதில் மிகவும் மாசடைந்துள்ள நகரமாக, காற்றின் தர அட்டவணையில் 276 புள்ளிகள் பெற்று உத்தரபிரதேசத்தின் வாரணாசி முதலிடத்தைப் பிடித்துள்ளதாம். இந்த நகரம் 2014 மற்றும் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற்ற தொகுதியாகும். வாரணாசியைத் தொடர்ந்து 269 புள்ளிகளுடன் லக்னோ இரண்டாவது இடத்தையும், 266 புள்ளிகளுடன் முஸாஃபர் நகர் மூன்றாவது இடத்தையும், 264 புள்ளிகளுடன் ஹரியானாவின் யமுனா நகர் நான்காவது இடத்தையும், 256 புள்ளிகளுடன் உத்தரபிரதேசத்தின் மொரதாபாத் 5வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த இரண்டு முறையாக பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த வாரணாசி நகரம் தொடர்ந்து மாசடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X