பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2,000 நோட்டு செல்லாதா?

Added : அக் 24, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement

சென்னை: 'ஜனவரி 1 முதல் 2,000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.latest tamil news'ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் 1,000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. இதனால் 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும். எனவே ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக மாற்றி விட வேண்டும்' என சமூக வலை தளங்களில் ஆடிட்டர் ஒருவர் பெயரில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. அதுபோல 1,000 ரூபாய் நோட்டு வெளியிடுதல் 2,000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுதல் போன்ற எந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கியோ மத்திய அரசோ வெளியிடவில்லை. மக்களை குழப்பவே இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப் படுகின்றன.


latest tamil newsசமீபத்தில் புதிய 1,000 ரூபாய் நோட்டு புகைப்படம் உலா வந்தது. தற்போது இது போன்ற தகவல்கள் பரவுகின்றன. இவற்றை பொது மக்கள் நம்ப வேண்டாம். மத்திய அரசும் போலீசாரும் இது போன்ற போலி தகவல்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
30-அக்-201913:36:39 IST Report Abuse
spr பணத்தை வங்கியில் போடாமல் வீட்டில் வைத்திருப்பவர்கள் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தை அதிரடியாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை நடத்தியதன் மூலம், திரு மோடி வெற்றிகரமாக மக்களின் மனதில் விதைத்துவிட்டார் என்றே கொள்ள வேண்டும் இந்த வதந்திக்கு காரணம் மத்திய வங்கி இந்த இரண்டாயிரம் ருபாய் நோட்டை அச்சடிப்பதனை நிறுத்திவிட்டதாக ஒரு Right to Information act அடிப்படையில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அறிவித்தததும் அது செய்தித்தாளிகளில் Oct 14, 2019 வெளியான செய்தியும் காரணம் "2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக அந்த பதிவில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2019-20ம் நிதி ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்படவில்லை. இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
25-அக்-201915:49:24 IST Report Abuse
Harinathan Krishnanandam கட்டாயம் பதுக்குவோர் பாதுகாப்பு பெட்டகங்களுக்குள்
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
24-அக்-201916:52:25 IST Report Abuse
Somiah M பா ஜ க ஆட்சியில் எதுவும் நடக்கலாம் என்கிற நிச்சயமற்ற நிலைமையே இத்தகைய வதந்திகளுக்கு காரணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X