அதீத நம்பிக்கையில் பா.ஜ., : 5000 லட்டுக்கள் 'ஆர்டர்'

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

மும்பை : மகாராஷ்டிராவில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் பா.ஜ., - சிவசேனா கட்சிகள் உள்ளன. இதனால் வெற்றியை கொண்டாட ஏற்கனவே 5000 லட்டுக்கள், ஏராளமான மாலைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.



latest tamil news



மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட உள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட கருத்து கணிப்புக்களில் 6 கருத்துகணிப்புக்கள் இரு மாநிலங்களிலும் பா.ஜ.,வே வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளன. இதனால் உற்சாகமடைந்த பா.ஜ.,வினர் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ளனர். காலை 10 மணிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரும் தெற்கு மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என பா.ஜ., கேட்டுக் கொண்டுள்ளது.


latest tamil news


முதல் சுற்று நிலவரம் வெளியானது முதல் வெற்றியை கொண்டாட துவங்க வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எண்ணிக்கை நிலவரம் வெளி வருவதை பொறுத்து பிற்பகல் முதல் கொண்டாட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தாங்கள் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாக தெரியும் எனவும், எத்தனை இடங்கள் என்பதை தெரிந்து கொள்ளவே தாங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-அக்-201913:38:13 IST Report Abuse
ஆப்பு முதல்ல லட்டு...அப்புறம் 5 வருஷம் அல்வா..
Rate this:
24-அக்-201917:09:53 IST Report Abuse
டுமீலன்இது உங்க களவானி ஆட்சியா?...
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
24-அக்-201917:21:35 IST Report Abuse
KavikumarRamஅறுபது ஆண்டு அல்வா சாப்பிட்டு கடுமையான சுகர் வந்திருச்சு போல?...
Rate this:
Cancel
24-அக்-201913:36:44 IST Report Abuse
ஆப்பு காங்கிரஸ் ஆளுங்களுக்கு தேவைப்படும். ஆர்டரை அங்கே அனுப்பிச்சுரலாம்.
Rate this:
Cancel
24-அக்-201913:35:47 IST Report Abuse
ஆப்பு 168 லட்டுக்கே லாட்டரி போலிருக்கே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X