மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., - சிவசேனா ஆட்சி

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (21)
Advertisement

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.





மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தலில் 185க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் பா.ஜ., மட்டும் 104 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது. சிவசேனா 62 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 145 என்ற நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது. பா.ஜ., சிவசேனா கூட்டணி, 158 தொகுதிகளில் வெற்றி பெற்று பெற்றுள்ளது., 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.






தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தாலும், கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு இம்முறை ஆட்சியை விட்டுக் கொடுக்கும் என்றே கூறப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு இரு கட்சிகளும் கூடி, யாருக்கு முதல்வர் பதவி என்பதை ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்றே கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MIRROR - Thamizhagam,இந்தியா
24-அக்-201921:41:55 IST Report Abuse
MIRROR காங்கிரஸ் கட்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது / பிஜேபி செல்வாக்கு தேய்கிறது
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
24-அக்-201919:46:39 IST Report Abuse
Ramakrishnan Natesan நாளை நாடு முழுக்க தந்த்ரஸ் உங்கள் ஊரில் கொண்டாடுவார்கள் மக்கள் நகை எலக்ட்ரானிக் goods வாங்கி ( பருந்தே= இன்னும் சேரனும் ) என்று கொண்டாடுவார்கள் நம்ம அமித் ஷா ஹரியானா விரைந்து CONGRESS MLA க்களை விலைக்கு வாங்குவார் இது தான் BJP பவிசு ஆட்சி எங்களது ஆனால் MLA காங்கிரஸ் காரன் சிரிப்பா வருது
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
24-அக்-201919:41:24 IST Report Abuse
Ramakrishnan Natesan பாஜகவுடன் 50:50 அதிகாரப் பகிர்வு பார்முலாவை நடைமுறைப்படுத்தும் நேரம் வந்து விட்டது: உத்தவ் தாக்கரே. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, இதில் பாஜக கடந்த தேர்தலைக் காட்டிலும் 27இடங்களை இழந்துள்ளது என்றே கூற வேண்டும், மாறாக காங்கிரஸ் 18 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளன, இது பெரிய தலைவர்கள் தாறுமாறாகப் பிரச்சாரம் செய்தும், கிளீன் ஸ்வீப் என்று பாஜக தலைவர்கள் மார்தட்டியதற்கும் மாறான ஒரு முடிவாகவே உள்ளது. பாவம் காங்கிரஸ் க்கு வலிமையான கூட்டணி அமைய வில்லை இல்லை எனில் தண்ணி காட்டி இருக்கலாம் ஹரியானா மாதிரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X