அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்: ஓபிஎஸ்

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மதுரை : இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.






மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் பன்னீர்செல்வம், உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்றார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட 16 பேரை கட்சியில் இருந்து நீக்கியது நீக்கியது தான். மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை. அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பது பற்றி கட்சியின் பொதுக் குழு தான் முடிவு செய்யும் என பதிலளித்தார்.





மேலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என கோர்ட்டில் தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது. அதன்படி டிசம்பருக்குள் உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார்.


அவகாசம்

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை எனக் கூறி, உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தாக்கல் செய்ய 4 வாரங்கள் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கிடையில் ஓபிஎஸ்.,ன் பதில் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தினகரன், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சசிகலா ஒரு போதும் அதிமுக.,வில் சேர மாட்டார் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - OOty,இந்தியா
24-அக்-201922:28:58 IST Report Abuse
Arasu அது தான் EVM மோடி ரெடி பண்ணி தாரார்...அப்புறம் என்ன பயம்
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
24-அக்-201920:58:55 IST Report Abuse
 Sri,India பொங்கல் செலவுக்கு தேர்தல் வந்தாச்சு . வேறென்ன லாபம்?? பல ஆயிரம் கோடீஸ்வரர்களை உருவாக்கும் தேர்தல் இது .
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-அக்-201912:02:56 IST Report Abuse
Sampath Kumar சொல்லாதீங்க செயுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X