அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி மீது நடவடிக்கை - இபிஎஸ் உறுதி

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (51)
Advertisement

சென்னை : திமுக கட்சி நாளிதழான முரசொலி செயல்படும் இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44,551 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாங்குநேரி தொகுதியில் அதிமுக.,வின் நாராயணன் 32,333 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது: இடைத்தேர்தலில் மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்.

உண்மைக்கான வெற்றி


நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினும், அவரின் கூட்டணி கட்சியினரும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அதனால், இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியினர் வெற்றி பெற்ற தொகுதியில் கூட அதிமுக.,வுக்கு மக்கள் வெற்றியை அளித்துள்ளனர். எனவே, இது உண்மைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.

பஞ்சமி நிலம்


இந்த வெற்றிக்கு காரணமான துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர், தொண்டர்கள், வாக்களர்களுக்கு நன்றி. உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். முரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a.s.jayachandran - chidambaram,இந்தியா
24-அக்-201922:38:55 IST Report Abuse
a.s.jayachandran தமிழ்நாட்டில் அரசியல் வாதிகளிடம் உள்ள அனைத்து பஞ்சமி நிலங்களையும் பிடுங்கி அதை தலித்துகளிடம் ஒப்படைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
24-அக்-201922:14:20 IST Report Abuse
Krishna ExpectedTN-Results-Mal programmed EVMs Ensured Victory As Liked by Rulers For Boosting Local Election Win And BJP-ADMK survival
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
24-அக்-201921:48:52 IST Report Abuse
Raj பஞ்சமி நிலம் ஒருவர் வாங்கினால், விற்றவருக்கு பொறுப்பு இல்லையா ? என்ன நியாயம் ? 1891 வருஷத்துல கொடுத்த நிலம், இவங்களுக்கு தேவைன்னா வித்துருவாங்க. அப்புறம் வித்தவங்களோட வாரிசுகள் 100 வருஷம் கழித்து அரசு ஏன் இதை தடுக்கவில்லை என்று கேப்பாங்களா ? சும்மா கிடைச்சா நல்லா தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X