அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோல்வியை தலைவணங்கி ஏற்கிறோம்: ஸ்டாலின்

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (158)
Advertisement
DMK, DMK Leader, DMK Stalin, Stalin, ByElection, Nanguneri, Vikravandi, Election Result, திமுக, திமுக தலைவர், ஸ்டாலின், இடைத்தேர்தல், தேர்தல், முடிவுகள், விக்கிரவாண்டி, நாங்குநேரி

சென்னை: இடைத்தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் சட்டசபையில் அதிமுக.,வின் பலம் 124ஆக உயர்ந்தது. எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி, இரு தொகுதியிலும் முன்பு பெற்ற வெற்றியை பறிகொடுத்தது.
தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடைத்தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறோம் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். வெற்றியால் ஆடுவதும், தோல்வியால் துவண்டு போவதும் திமுகவின் பழக்கம் இல்லை. வாக்களித்தவர்களுக்கு நன்றி; வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம். கடந்த கால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.





கடந்த கால படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம். திமுக பொறுத்தவரை வெற்றியால் களிப்பில் ஆடுவதும், தோல்வியில் துவண்டு போவதும் இல்லை. ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார துஷ்பிரயோகத்தை மீறி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளித்த வாக்களார்களுக்கு நன்றி. மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். வாக்களிக்காதவர்களின் நம்பிக்கை பெற தொடர்ந்து உழைப்போம். மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (158)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
27-அக்-201914:39:31 IST Report Abuse
Swaminathan Chandramouli இனி வரும் தேர்தல் தோல்விகளையும் தலை குனிந்து வணங்கி தோல்வியை ஏற்று கொள்ளவேண்டியது தான்
Rate this:
Share this comment
Cancel
M.RAGHU RAMAN - chennai,இந்தியா
26-அக்-201921:00:24 IST Report Abuse
M.RAGHU RAMAN கவலை படாதே சகோதரா, நாளை வெற்றி உன்கையில்....
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
26-அக்-201908:07:48 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி தலை நிமிர்ந்தும் தோல்வியை ஏற்றுக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X