அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பாச்சா பலிக்கவில்லை: ராமதாஸ் பாய்ச்சல்

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (44)
Advertisement
பாமக, பா.ம.க., ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விக்கிரவாண்டி, வன்னியர், தி.மு.க., திமுக, ஸ்டாலின், தளபதி ஸ்டாலி்ன், திராவிட முன்னேற்ற கழகம், அதிமுக, அ.தி.மு.க., அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், PMK, ramdoss, dmk, stalin, M.k.stalin,  vikkiravandi, people, admk, by election,

சென்னை: விக்கிரவாண்டியில், ஏமாற்ற முயன்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக, வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக, இந்த இடைத்தேர்தல்களில் அருவருக்கத்தக்க உத்திகளைக் கையாண்டது. விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஸ்டாலின், வன்னியர்கள் நலனில் அக்கறை கொண்டவரைப் போன்று நடித்தார். வன்னிய மக்களுக்கு தாங்கள் தான் இட ஒதுக்கீட்டைக் கொடுத்ததாக பொய் பிரசாரம் செய்ததன் மூலம் வன்னியர்கள் 9 ஆண்டுகால சமூகநீதிப் போராட்டங்களையும், 21 சொந்தங்களின் உயிர்த்தியாகத்தையும் கொச்சைப்படுத்தினார்.
திமுக ஆட்சியில் பலமுறை நான் வலியுறுத்தியும் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கருணாநிதி மறுத்து விட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங்கப் படும் என்று கூறி ஏமாற்ற முயன்றார். ஸ்டாலினின் பொய் வணிகத்தை, அறிக்கைகள் மூலமாகவும், பிரசாரத்தின் மூலமாகவும் அம்பலப்படுத்தினேன். அதன்பயனாக, எந்த மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயன்றாரோ, அதே மக்களே அவருக்கு படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது துதிபாடிகளும் மூட்டை, மூட்டையாக பொய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற விக்கிரவாண்டி மக்களிடம் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை. லோக்சபா தேர்தலில் பொய்களை விதைத்து, வெற்றிகளை அறுவடை செய்து தங்களை ஏமாற்றிய திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-அக்-201911:45:01 IST Report Abuse
Malick Raja அதிமுகவின் முதுகில் பாமக சவாரி செய்கிறது . அதிமுக கழட்டிவிட்டால் பாமகவுக்கு முகவரி இருக்கவே வாய்ப்பில்லை .. வரும் தேர்தல்கள் அனைத்திலும் அதிமுகவின் அடிமை கட்சியாக பாமக தொடரும் .. தொடரவேண்டும் அவர்கரளிடமிருந்து விலகினால் எந்த கூட்டணியிலும் பாமகவை சேர்க்கவே மாட்டார்கள் . மருத்துவர் ராமதாஸ் சொத்துக்கணக்கு விவரங்கள் அனைத்தும் பிஜேபி கையில் ஆதாரபூர்வமாக கிடைத்துள்ளது அதனால் பிஜேபியை தாக்கி பேசாமல் தூக்கிப்பேசவே வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
ராமநாதன் நாகப்பன் டயர் நக்கிகள் என்றும் அடிமைகள் என்றும் தங்கள் புதல்வர் அதிமுகவினரை புகழ்ந்து பேசியது தான் நினைவுக்கு வருகிறது. அது போகட்டும் நீங்கள் எப்படியாவது அவரை மத்திய அமைச்சர் ஆக்கிவிட துடிப்பது புரிகிறது. ஆனா பாருங்க அவர் மேலயும் வழக்கு இருக்கிறது. எப்படியும் பாஜகவுக்கு பல்லக்கு தூக்கிவிட்டால் அவர்கள் அனைவரும் புனிதர் பட்டம் ஆகிவிடுவர். நடத்துங்கள்..
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-அக்-201901:00:35 IST Report Abuse
Vena Suna யார் வெற்றி பெற்றாலும் வாழ்த்துக்கள். ஆனால்,மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பது தான் கவலை. மக்களுக்காக நல்லது செய்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே தொடர் வெற்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X