ஸ்டாலின் பாச்சா பலிக்கவில்லை: ராமதாஸ் பாய்ச்சல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பாச்சா பலிக்கவில்லை: ராமதாஸ் பாய்ச்சல்

Updated : அக் 24, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (44)
Share
சென்னை: விக்கிரவாண்டியில், ஏமாற்ற முயன்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக, வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும்
பாமக, பா.ம.க., ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விக்கிரவாண்டி, வன்னியர், தி.மு.க., திமுக, ஸ்டாலின், தளபதி ஸ்டாலி்ன், திராவிட முன்னேற்ற கழகம், அதிமுக, அ.தி.மு.க., அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், PMK, ramdoss, dmk, stalin, M.k.stalin,  vikkiravandi, people, admk, by election,

சென்னை: விக்கிரவாண்டியில், ஏமாற்ற முயன்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, மக்கள் படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக, வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக, இந்த இடைத்தேர்தல்களில் அருவருக்கத்தக்க உத்திகளைக் கையாண்டது. விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக, ஸ்டாலின், வன்னியர்கள் நலனில் அக்கறை கொண்டவரைப் போன்று நடித்தார். வன்னிய மக்களுக்கு தாங்கள் தான் இட ஒதுக்கீட்டைக் கொடுத்ததாக பொய் பிரசாரம் செய்ததன் மூலம் வன்னியர்கள் 9 ஆண்டுகால சமூகநீதிப் போராட்டங்களையும், 21 சொந்தங்களின் உயிர்த்தியாகத்தையும் கொச்சைப்படுத்தினார்.


latest tamil news


திமுக ஆட்சியில் பலமுறை நான் வலியுறுத்தியும் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கருணாநிதி மறுத்து விட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங்கப் படும் என்று கூறி ஏமாற்ற முயன்றார். ஸ்டாலினின் பொய் வணிகத்தை, அறிக்கைகள் மூலமாகவும், பிரசாரத்தின் மூலமாகவும் அம்பலப்படுத்தினேன். அதன்பயனாக, எந்த மக்களை ஸ்டாலின் ஏமாற்ற முயன்றாரோ, அதே மக்களே அவருக்கு படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது துதிபாடிகளும் மூட்டை, மூட்டையாக பொய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற விக்கிரவாண்டி மக்களிடம் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை. லோக்சபா தேர்தலில் பொய்களை விதைத்து, வெற்றிகளை அறுவடை செய்து தங்களை ஏமாற்றிய திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X