மஹாராஷ்டிராவில் 50 /50

Updated : அக் 25, 2019 | Added : அக் 24, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா கட்சி மிக மும்முரமாக இறங்கி பிரசாரம் செய்தது. மேலும் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரே முதன்முறையாக போட்டியிட்டார்.தேர்தலில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பா.ஜ., 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், சிவசேனா 50க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியில்

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா கட்சி மிக மும்முரமாக இறங்கி பிரசாரம் செய்தது. மேலும் உத்தவ் தாக்ரே மகன் ஆதித்யா தாக்ரே முதன்முறையாக போட்டியிட்டார்.



latest tamil news



தேர்தலில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பா.ஜ., 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், சிவசேனா 50க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியில் அமர்கிறது. இந்த முறை ஆட்சியில் சிவசேனா பங்கு கேட்டுள்ளது. இதனால் இந்த கட்சிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே இன்று (24 ம் தேதி) நிருபர்களிடம் பேசுகையில்; மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளனர். மாநில மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.,வும், சிவசேனாவும் 50க்கு 50 என பிரித்து கொள்வது என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்தவுள்ளோம்.


latest tamil news



அமித்ஷாவுடனும் பேச்சு நடத்துவோம். பின்னர் யார் முதல்வராக அமர்வது என்பது குறித்தும் முடிவு செய்வோம். போதிய அளவு அதிகாரத்தில் இடம்பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். ஆட்சி அமைப்பது தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேசப்படுகிறதா என்ற கேள்வி தவறானது என்றும் தெரிவித்தார்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று நிருபர்களிடம் பேசுகையில்: ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஏற்கனவே சிவசேனாவுடன் என்ன பேசப்பட்டதோ அவ்வாறு நடக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
26-அக்-201908:39:01 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி மஹாராஷ்டிராவில் பா ஜெ க தனித்து நின்றாலே இப்போதைக்கு விட கூடுதல் இடங்களில் வென்று இருக்கும். இப்போது நடந்த தேர்தலில் பா ஜ க அதிக இடங்களில் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக ப ஜ க நின்ற இடங்களில் சிவசேனை ஓட்டுக்கள் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது.மும்முனைப் போட்டியாக இருந்திருந்தால் பா ஜ க 160 க்கும் அதிகமான இடங்களை பிடித்திருக்கும். எனவே நம்பிக்கைத் துரோகம் செய்யும் சிவசேனைக்கு 50 / 50 என்பதெல்லாம் கூடாது .1 / 3 என்பதே சரியாக இருக்கும். மேலும் மத்திய அரசையோ மாநில அரசையோ குறை கூறிக்கொண்டே இருந்தால் இவர்களைக் கழட்டி விட்டுவிட்டு சரத் காட்சியைச் சேர்த்துக்கொள்ளலாம்.ஏனெனில் அது வாடா மாநிலங்களில் இன்னும் சில இடங்களில் பா ஜ க வுக்கு உதவும்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-அக்-201910:20:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni இத தாக்ரேக்கூட்டம் சிறுது தொல்லை தரும்கூட்டம் அப்பாக்குதப்பாத பிள்ளை உத்தவ என்பது 100%உண்மை நம்பவே முடியாத நபர் எப்போதும் காலைவாரும் குணம் உள்ளவர்கல் என்பது உண்மை
Rate this:
Cancel
24-அக்-201921:43:05 IST Report Abuse
ஆப்பு மகா. விலும், அரியானாவிலும் எல்லோரும் சவுக்கியம்னு சொல்லிட்டிருந்தங்களே இப்பிடி தொங்க வெச்சுட்டீங்களே...
Rate this:
சீனு, கூடுவாஞ்சேரிஇப்படி பேசியே சுடாலின் நான்கு வருடங்கள் கழித்து விட்டார். அது நாப்பது வருடங்களாகவும் மாறும். மகாராஷ்டிராவையும் ஹரியானாவையும் ஷா பார்த்துக்கொள்வார். நீங்கள் தென்னிந்திய பப்புவுக்கு கொஞ்சம் பிராணவாயு செலுத்துங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X