பொது செய்தி

தமிழ்நாடு

விஜய் ரசிகர்கள் 'காலித்தனம்' : ரோட்டில் ரகளை

Updated : அக் 25, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (104)
Advertisement

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டி அடித்துள்ளனர். இதனால் கிருஷ்ணகிரியில் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






விஜய் ரசிகர்களால் கலவர பூமியானது கிருஷ்ணகிரி

விஜய் நடித்த 'பிகில்' படம் இன்று (அக்.,25) ரிலீசானது. இப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு கடைசி நிமிடத்தில், அனுமதி அளித்தது. இரவு 10 மணிக்கு மேல் தமிழக அரசு 'பிகில்' சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்ததால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 650 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டதால், நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் விஜய் ரசிகர்கள் கூச்சலிட்டு வந்தனர். சில தியேட்டர்களில் ஒரு மணி நேரம் தாமதமாக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.




கிருஷ்ணகிரியில் 'பிகில்' சிறப்புக்காட்சி நள்ளிரவில் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சி வெளியாகாததால், ரவுண்டானா பகுதியில் உள்ள போலீசாரின் தடுப்புக்களையும், சிசிடிவி கேமராக்களையும் உடைத்தனர். கற்களையும் வீசி தாக்கியதால், போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இது தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.




பிகில் இசை வெளியீட்டின் போது, ‛‛என் மீது வேண்டுமானாலும் கை வையுங்கள், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்'' என மேடையில் வீராவேசம் பேசினார் விஜய். அதன்பிறகு இங்கு பல பிரச்னைகள் நடந்தன. ஆனால் எதுவும் பேசாமல் உம்னு, கம்னு, ஜம்முனு வெளிநாடு பறந்தார்.

ஆனால் அவரது ரசிகர்களோ பொது சொத்தை சேதப்படுத்தி காலித்தனம் செய்கின்றனர். இதை கண்டிக்க மாட்டார். அவருக்கென்ன, ஒரு படத்தில் நடிக்க வேண்டியது, படம் ரிலீஸாகும் போது ஏதாவது பரபரப்பாக பேச வேண்டியது, அதை வைத்து படத்திற்கு ஒரு பெரிய பப்ளி சிட்டி தேட வேண்டியது. இதையே ஒவ்வொரு படத்திற்கும் வாடிக்கையாக கொண்டுள்ளார் விஜய் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நல்ல பழக்கங்கள், ஒழுக்கம் குறித்து திரையில் மட்டுமே 'பஞ்ச்' வசனங்கள் பேசும் விஜய் போன்ற நடிகர்கள், தங்களின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் காலித்தனங்களை நிஜத்தில் கண்டு கொள்வதில்லை. இத்தகைய அநாகரிகமான செயல்களுக்கு விஜய் போன்ற நடிகர்கள் கண்டனம் கூட தெரிவிப்பதில்லை.

Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-அக்-201911:19:28 IST Report Abuse
பிரவீன்    சென்னை சென்னையில் பேனர் வீழ்ந்ததுக்கு சவுண்ட் விட்டானுங்க இதுக்கு ஏன் சவுண்ட் விடாம கம்னு இருங்காக விஜய் கமல் ரொம்பவும் அன்னிக்கு ரொம்பவும் சவுண்ட் விட்டானுங்க
Rate this:
Share this comment
Cancel
26-அக்-201903:35:49 IST Report Abuse
கதிர்   கோவை அவ்வளவு பேரையும் நைய புடைச்சு உள்ள போடுங்க இவனோட படம் வரும்போது எல்லாம் இவங்க அலட்டல் தாங்க முடியலை பப்ளிக் கு இடைஞ்சல் இவங்க நெறய பண்ணறங்க
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-அக்-201920:08:39 IST Report Abuse
Natarajan Ramanathan பிகிலு ரொம்பவே சுமார்தான் என்ற தகவலால் விரக்தியாகவும் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X