அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசை பாராட்டி மோடி கடிதம்

Updated : அக் 25, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
Modi, Jinping, China, PM, PM Modi, Narendra Modi, மோடி, பிரதமர், சீன அதிபர், ஜின்பிங், மாமல்லபுரம், முதல்வர் பழனிசாமி, கடிதம்

சென்னை: கடந்த அக்., 11, 12ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக அரசுக்கு, மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சீன அதிபரின் வருகையின்போது வரவேற்பு, அன்பான உபசரிப்பு போன்றவை நாட்டின் கலாசாரத்தை பிரதபலித்தன. மாமல்லபுரம் வந்தது தனக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. மாநாடுக்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி, என பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
இதேபோன்று சீன தூதர் சன் வெய்டங்-ம் முதல்வர் பழனிசாமியை பாராட்டியுள்ளார். அவர், சீன அதிபர் மற்றும் குழுவினருக்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி. சீன - இந்திய மக்களிடையே கலாசார பரிமாற்றங்களை மென்மேலும் மேம்படுத்துவோம், என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு கடந்த 11ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக அரசுக்கு, பிரதமர் மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். சீன அதிபரின் வருகையின்போது வரவேற்பு, அன்பான உபசரிப்பு போன்றவை நம் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலித்தன. மாமல்லபுரம் வந்தது தனக்கும், சீன அதிபருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார். மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி, என பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-201917:21:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பழனிக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தி
Rate this:
Cancel
25-அக்-201914:44:15 IST Report Abuse
ஆப்பு இந்த பாராட்டு, வாழ்த்து எல்காம் தெரிவிக்குறதுக்கே ஒரு டிபார்ட்மெண்ட்டே நடத்துறாங்க போல...
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
25-அக்-201914:34:04 IST Report Abuse
சீனி அதிமுக வெற்றி பெற்ற தருணத்தில், இந்த வாழ்த்துச்செய்தி அனுப்பியிருப்பது மிக அருமை மோடி அவர்களே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X