'வருங்கால முதல்வர்' : போஸ்டரால் மஹா.,வில் பரபரப்பு

Updated : அக் 25, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (14)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவை, 'வருங்கால முதல்வர்' என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






நேற்று வெளியான மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகளில் பா.ஜ., 105 இடங்களிலும், சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த தேர்தலில் சிவசேனா கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்ய தாக்கரே, வோர்லி (Worli)தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை 70,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பால் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியிலும், முதல்வர் பதவியிலும் 50:50 பங்கு கேட்டு வருகிறது, சிவசேனா. இருந்தும் யாருக்கு முதல்வர் பதவி என்பது பற்றி இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.






இந்நிலையில் வோர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேவின் வெற்றியை கொண்டாடும் விதமாக அக்கட்சி தொண்டர்கள் சார்பில் போஸ்டர் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆதித்ய தாக்கரேவை 'வருங்கால முதல்வர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பகுதியில், புலி ஒன்று கையில் தாமரை வைத்திருப்பது போன்ற கார்டுனை வெளியிட்டு அத்துடன், 'நையாண்டி ஓவியம் ஆச்சரியமாக உள்ளது. பரவாயில்லை இது தீபாவளி சமயம்' என கருத்து பதிவிட்டுள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன் ஆதித்ய தாக்கரே போட்டியிடுவது குறித்து விளக்கம் அளித்திருந்த உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவிக்காக தனது மகனை தேர்தலில் போட்டியிட வைக்கவில்லை என கூறி இருந்தார். தற்போது வருங்கால முதல்வர் என ஆதித்ய தாக்கரேவை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-அக்-201920:26:24 IST Report Abuse
ஸாயிப்ரியா முதல்வர் கனவு இப்போது போஸ்டரில் தொடர்கிறது சில இடங்களில் ரசிகர்கள் பெயரால் போஸ்டரில் தொடர்கிறது. தீர்ப்பு மக்கள் கையில்.
Rate this:
Share this comment
Cancel
joseph ponniah - chennai,இந்தியா
25-அக்-201917:51:40 IST Report Abuse
joseph ponniah In this condition the new government may not deliver good service to Maharastra people.
Rate this:
Share this comment
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
25-அக்-201917:23:06 IST Report Abuse
sankaranarayanan வாரிசு அரசியல் பண்ணுற கட்சியோடு கூட்டணி இல்லை என்று கூறிய பா.ஜ.காவுடன் எப்படி - சிவசேனா கூட்டு வந்ததோ அதேபோல் சுடலை வீரமணி கும்பலுக்கு முழுக்கு போட்டு, பா.ஜ.காவுடன் சேர முயற்சி செய்தால், வாரிசு அரசியல் பிழைக்கும். இல்லையேல் சூன்யம்தான்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X