சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க போராட்டம்

Updated : அக் 26, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement
திருச்சி: திருச்சி, மணப்பாறை அருகே, மூடாமல் வைத்திருந்த ஆழ்துளைகிணற்றில் விழுந்த, 2 வயது குழந்தையை மீட்க, தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி.இவர்களின் மகன் சுஜீத் வில்சன், 2. ஆரோக்கியராஜ் வீட்டுக்கு பக்கவாட்டில், அவருக்கு சொந்தமான நிலம்

திருச்சி: திருச்சி, மணப்பாறை அருகே, மூடாமல் வைத்திருந்த ஆழ்துளைகிணற்றில் விழுந்த, 2 வயது குழந்தையை மீட்க, தீயணைப்புத் துறையினர் போராடி வருகின்றனர்.latest tamil newsதிருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி.இவர்களின் மகன் சுஜீத் வில்சன், 2. ஆரோக்கியராஜ் வீட்டுக்கு பக்கவாட்டில், அவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. மழை பெய்ததால், சோளம் பயிரிட்டுள்ளனர். நிலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, துார்ந்து போன ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் உள்ளது.


latest tamil newsநிலத்தில், ஒரு அடிக்கு மேல் சோளம் வளர்ந்துள்ளது. நேற்று மாலை, 5:30 மணியளவில், கலாராணி மற்றும் சிலர், வீட்டின் முன் இருந்துள்ளனர்.பக்கவாட்டு நிலத்தில், சுஜீத் வில்சன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையின் அலறல் கேட்டுள்ளது. ஓடிச் சென்று பார்த்தபோது, மூடாமல் விட்ட ஆழ்துளைகிணற்றில், சிறுவன் விழுந்தது தெரிந்தது.


latest tamil news


Advertisement


தகவலறிந்து, மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சிறுவன், 20 - 25 ஆடி ஆழத்துக்குள் இருப்பது தெரிந்தது. ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி, தீவிரமாக நடந்தது.ஒருபுறம் குழந்தையை மீட்க, தீயணைப்பு துறையினர் போராட, மறுபுறம், குழந்தைக்கு எதுவும் நடக்காத வகையில், டாக்டர்கள் குழுவினர், ஆழ்குழாய் உள்ளே ஆக்சிஜன் செலுத்தினர்.குழிக்குள் விழுந்த குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், குழந்தையை கண்காணிக்க, கேமராவும் பொருத்தப்பட்டது.

மணிகண்டன் என்பவர் வடிவமைத்த பிரத்யோக கருவி வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடந்தது .இம்முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, பின்னர் கோவையிலிருந்தும் மீட்பு குழுவினர் வந்து முயற்சித்தனர். இந்த முயற்சியும் தோல்வியடைந்ததால். மீண்டும் பக்கவாட்டில் பொக்கலைன் மூலம் நாலாபுறம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி நடந்து வருகிறது. 15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால் பள்ளம் தோண்டும் பணியும் கைவிடப்பட்டது. கோவை, மதுரை குழுவினர் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் நாமக்கல் குழுவும் குழந்தையை மீட்க முயற்சி எடுத்தது. மேலும் புதுக்கோட்டையிலிருந்து வீரமணி என்பவர் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து முயற்சி மேற்கொண்டது.


latest tamil newsபல்வேறு குழுக்களின் பல மணி நேர போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில்குழந்தைையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னையிலிருந்து விரைந்துள்ளது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 26 அடியிலிருந்து 68 அடிக்கு கீழே சென்று விட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் பதற்றத்துடன் உள்ளனர். குழந்தையின் தாய் மயக்கம் அடைந்ததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news12 மணி நேரத்திற்கும் மேல் மீட்பு பணிகள் நடந்துவருவதால் குழந்தை மீட்கப்பட்டதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


latest tamil newsகுழந்தை மீட்கும் முயற்சி டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. சுஜீத்தை பத்திரமாக மீட்க பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
28-அக்-201913:19:19 IST Report Abuse
oce ஆழ் துளை கிணறுகளில் வலுவான மெல்லிய மக்காத கயிறுகளை அடி வரை தொங்கவிட்டு வைத்தால் பைப்புக்குள் கயிற்றின் மேல் விழும் குழந்தையை சுலபமாக மேலே இழத்து காப்பாற்ற முடியும்.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
26-அக்-201910:49:53 IST Report Abuse
 Sri,India கடுமையாக போராடும் அமைச்சர் விஜய பாஸ்கர் ,போலீஸ் அதிகாரிகள் மற்றும் இதர மீட்பு குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் . விரைவில் அந்தக் குழந்தை நலமுடன் திரும்ப கடவுள் அருள் கிடைக்கட்டும் .
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
26-அக்-201910:21:47 IST Report Abuse
Thiagarajan Kodandaraman மனித நேயம் மிக்க ஹிந்து சஹோதர்களுக்கு கோடி வணக்கங்கள் . பாரத் மாதாக்கி ஜெய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X