பா.ஜ.வுக்கு ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு

Updated : அக் 25, 2019 | Added : அக் 25, 2019 | கருத்துகள் (15) | |
Advertisement
குர்கான்: ஹரியானா சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ. தீவிரம் காட்டி வரும் நிலையில், கோபால் கந்தா என்ற சுயேட்சை எம்.எல்.ஏ. பா.ஜ.விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது பா.ஜ. கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க பா.ஜ.வுக்கு 7
பா.ஜ., சுயேட்சை, எம்.எல்.ஏ., கோபால் கந்தா,

குர்கான்: ஹரியானா சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பா.ஜ. தீவிரம் காட்டி வரும் நிலையில், கோபால் கந்தா என்ற சுயேட்சை எம்.எல்.ஏ. பா.ஜ.விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது பா.ஜ. கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க பா.ஜ.வுக்கு 7 சுயேட்சைகள் முன்வந்துள்ளனர். இவர்களில் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான கோபால் கந்தா, கடந்த 2012-ம் ஆண்டு காங். ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் இவருக்கு சொந்தமான விமான நிறுவனத்தில், பணியாற்றிய விமானப் பணிப் பெண், கீதிகா சர்மா, 23 என்பவர், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு, கோபால் கந்தாவும், அவரது உதவியாளர், அருணா சத்தாவுமே, கீதிகாவின் தற்கொலைக்கு காரணம் என, புகார் எழுந்தது.


latest tamil news




இதையடுத்து, கோபால் கந்தா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உடன், அவரும், அவரது உதவியாளரும், கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக, தற்கொலை செய்ய தூண்டியதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவர் போன்று ஒரு கிரிமினல் குற்ற வழக்கில் சிக்கிய சுயேட்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவு பா.ஜ.விற்கு தேவையா என தலைவர்கள் உமா பாரதி உள்ளிட்ட சில பா.ஜ. மூத்த கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
26-அக்-201902:49:23 IST Report Abuse
Subbanarasu Divakaran கிட்ட தட்ட பல அரசியல் வாதிகள் கொள்ளை கொலை முதலிய அக்கிரமங்கள் செய்டவர்களே.நாம் இவர்கட்கு வோட்டை போடுகிறோம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-அக்-201921:40:26 IST Report Abuse
RajanRajan Bjp க்கு இவன் ஆதரவு தேவையில்லை
Rate this:
Cancel
Bala Paddy - CHICAGO,யூ.எஸ்.ஏ
25-அக்-201921:37:05 IST Report Abuse
Bala Paddy அய்யா உத்தமரே காங்கிரஸ் கட்சியின் / கூட்டணியின் டயிட்லரும், ராசாவும், கனியும், KD சகோதரர்களும், லாலுவும் என்ன தியாகிகளா??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X