பொது செய்தி

தமிழ்நாடு

சுஜித்தை மீட்க 5 மணி நேரத்தில் குழி தோண்டி முடிக்கப்படும் - கலெக்டர்

Updated : அக் 27, 2019 | Added : அக் 26, 2019 | கருத்துகள் (235)
Share
Advertisement
திருச்சி : திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 44 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. சுஜித்தை மீட்க அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தற்போது 'ரிக்' இயந்திரம் மூலம் குழந்தையை மீட்க குழி தோண்டப்படுகிறது.இந்நிலையில் ஆழ்துளைக்

இந்த செய்தியை கேட்க

திருச்சி : திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 44 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. சுஜித்தை மீட்க அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தற்போது 'ரிக்' இயந்திரம் மூலம் குழந்தையை மீட்க குழி தோண்டப்படுகிறது.

இந்நிலையில் ஆழ்துளைக் கிணறு உள்ள இடத்திற்கு ஓ.என்.ஜி.சி.,யின் ரிக் இயந்திரம் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தது. இதன் மூலம் 98 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்ட பின் குழந்தை சிக்கியுளள குழிக்கு சுரங்கப்பாதை அமைத்து குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி இன்று காலை 7 மணியளவில் துவங்கியுள்ளது. காலை 2 மணி வரை 40 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 98 அடி வரை குழி தோண்டிய பின்னர், குழிக்குள் இறங்குவதற்காக 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


latest tamil news
கலெக்டர் தகவல்

மீட்பு பணி குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு கூறுகையில், தெர்மாவில் கேமராவின் மூலம் பார்க்கும் போது, குழந்தை மயக்கநிலையில் தான் இருந்துள்ளான். உடலில் இருக்கும் வெப்பநிலையை வைத்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். குழந்தையை மீட்ட பின் தான் தற்போதைய நிலை தெரியும். இதயத்துடிப்பு 20 இருந்தாலே காப்பாற்றி விடலாம். பாறைகளால் தோண்டும் பணி தாமதமாகிறது. அதிநவீன கருவி பயன்படுத்துவதால் அதிர்வு குறைவாக தான் இருக்கும். இன்னும் 5 மணி நேரத்தில் குழி தோண்டி முடிக்கப்படும், எனக் கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: கடின பாறைகள் இருப்பதால் தோண்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. 90 அடிகள் வரையுமே பாறைகள் இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மீட்பு பணிகள் குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.

மேலும் குழந்தை சுஜித்தின் இரு கைகளும் கட்டப்பட்டுள்ளதால் 82 அடிக்கு கீழே இறங்கவும் முடியாது என நம்பப்படுகிறது


தொடர்ந்த முயற்சி


இதற்கு முன்பாக போர்வெல் இயந்திரத்தின் மூலம் குழி ஏற்படுத்தி . குழந்தையை மீட்க, என்.எல்.சி., ஓ.என்.ஜி.சி., மற்றும் தீயணைப்பு துறை குழு தொடர்ந்து முயற்சி செய்துவந்தது.latest tamil newsஹைட்ராலக் கருவி மூலம் சுஜித்தை மீட்கும் மற்றொரு முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.


குழந்தை விழுந்தது எப்படி


திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி.இவர்களின் மகன் சுஜீத் வில்சன், 2. ஆரோக்கியராஜ் வீட்டுக்கு பக்கவாட்டில், அவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. மழை பெய்ததால், சோளம் பயிரிட்டுள்ளனர். நிலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, துார்ந்து போன ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் உள்ளது. நிலத்தில், ஒரு அடிக்கு மேல் சோளம் வளர்ந்துள்ளது. நேற்று முன்தினம்(அக்.,25) மாலை, 5:30 மணியளவில், கலாராணி மற்றும் சிலர், வீட்டின் முன் இருந்துள்ளனர். பக்கவாட்டு நிலத்தில், சுஜீத் வில்சன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையின் அலறல் கேட்டுள்ளது. ஓடிச் சென்று பார்த்தபோது, மூடாமல் விட்ட ஆழ்துளை கிணற்றில், குழந்தை விழுந்தது தெரிந்தது.


latest tamil news


Advertisement


தகவலறிந்து, மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சுஜித், 20 - 25 ஆடி ஆழத்துக்குள் இருப்பது தெரிந்தது. ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி, தீவிரமாக நடந்தது.


latest tamil news
தோல்வி

ஒருபுறம் குழந்தையை மீட்க, தீயணைப்பு துறையினர் போராட, மறுபுறம், குழந்தைக்கு எதுவும் நடக்காத வகையில், டாக்டர்கள் குழுவினர், ஆழ்குழாய் உள்ளே ஆக்சிஜன் செலுத்தினர். குழிக்குள் விழுந்த குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், குழந்தையை கண்காணிக்க, கேமராவும் பொருத்தப்பட்டது. மணிகண்டன் என்பவர் வடிவமைத்த பிரத்யோக கருவி வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடந்தது . இம்முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, பின்னர் கோவையிலிருந்தும் மீட்பு குழுவினர் வந்து முயற்சித்தனர்.


latest tamil newsஇந்த முயற்சியும் தோல்வியடைந்ததால், மீண்டும் பக்கவாட்டில் பொக்கலைன் மூலம் நாலாபுறம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி நடந்தது. 15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால் பள்ளம் தோண்டும் பணியும் கைவிடப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் 20 அடியில் சிக்கிய குழந்தை 82 அடிக்கும் கீழ் சென்று விட்டார். தற்போதைய நிலையில், குழந்தை அசைவற்ற நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.


latest tamil news
அதிகாரிகள் விரைவு

கோவை, மதுரை குழுவினர் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் நாமக்கல் குழுவும் குழந்தையை மீட்க முயற்சி எடுத்தது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்தனர். சம்பவ இடத்தில் ஆம்புலன்சும், மருத்துவ குழுவுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


latest tamil news
latest tamil newsகுழந்தையின் நிலை என்ன :


குழந்தை பயப்படாமல் இருக்க வெளிச்சம் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி வரை குழந்தையின் குரல் கேட்டதாகவும், அதற்கு பிறகு குரல் ஏதும் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆழத்திற்கு சென்று விட்டதால் குழந்தை மயக்கமடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தையும் அசைவற்ற நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.


latest tamil newslatest tamil news
நம்பிக்கையுடன் மீட்பு பணி


வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர், ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், சிறுவனை மீட்கும் பணியில் 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று (அக்.,25)இரவு பின்னடைவு ஏற்பட்டது. 20 அடியில் மீட்கப்படும் நிலையில், சிறுவன் 82 அடிக்கு இறங்கினார். சிறுவனுக்கு பிராண வாயு அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை குரல் கேட்கவில்லை என அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
சென்னை மவுலிவாக்கத்தில் 3 நாட்களுக்கு பிறகு ஒடிசாவை சேர்ந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நம்பிக்கையை தளர விடாமல், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். தகவல் வந்த உடனே, கலெக்டர், டிஆர்வுவும் விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினரும் உடனடியாக சென்றனர். ஆழ்துளை கிணறு மிகவும் குறுகிய நிலையில் உள்ளதால், மீட்பு பணி சவாலாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்ட வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
latest tamil news
latest tamil news
latest tamil news
டிரெண்டிங்

குழந்தை ஆழ்துளையில் விழுந்த தகவல் அறிந்ததும், SaveSurjith என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. சுஜீத்தை பத்திரமாக மீட்க பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (235)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
28-அக்-201909:02:55 IST Report Abuse
karutthu தமிழர் நீதி என்ற பெயரில் எழுதறவனுக்கு மனசாட்சி கிடையாது .3, 4 நாட்களாக அவர்கள் குழந்தையை மீட்க போராடுகிறார்கள் .அரசை குறை சொல்பவன் மனசாட்சி இல்லாதவன் ஆனால் இவன் இங்கு நக்கலாக எழுதுகிறான் .
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
27-அக்-201921:55:29 IST Report Abuse
Anbu O.N.G.C. யில் 7000 அடி தோண்டி ஆயில் எடுக்கும் எந்திரம் இருக்கு.. 70 அடி ஆழத்தில் இருக்கும் குழந்தையை எடுக்கும் எந்திரம் மட்டும் இல்லைன்னு நக்கலடித்து ஒரு ஆமைக் கட்சி த்தொண்டன் ஸ்டேட்டஸ் போட்டுருக்கான் . அதுக்கு ஒரு 50 பேரு லைக் போட்டுருக்கான் . ஒரு 50 பேரு மோடியைத் திட்டியிருக்கான் . அவனுங்க எவ்வளவு அறிவுக்கொழுந்துன்னு பாருங்க.. .. ஆயில் எடுக்க மண்ணைத் தோண்டுவதும் , ஒரு 2 வயது க் குழந்தையை உயிருடன் மீட்க மண்ணைத் தோண்டுவதும் ஒன்றா .. ? அதே போல் இதைச் செய்ய முடியுமா என்று சிந்திக்கும் புத்தி இருந்தால் இப்படிப் பேசுவானா ? இடைத்தேர்தலில் ரெண்டு தொகுதியிலும் , தொகுதிக்கு 3000 பேர் இவனைப் போல் உள்ளவர்கள் ஆமைக்கறியானுக்குத்தான் ஓட்டுப் போட்டுருக்கான் . என்னத்தச் சொல்ல ..? .
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
27-அக்-201918:33:04 IST Report Abuse
karutthu மணப்பாறை தொகுதி எம் எல் எ எங்கே போனார் ? ஒருஅரசங்கமே இங்கு இருக்கிறது .முதல்வருக்கு ஹாட் லைன் ல் தகவல் போய்க்கொண்டிருக்குது .கலெக்டர் மூன்று மந்திரிகள் இங்கேயே இருக்கிறார்கள் .தீயணைப்பு படையினர் ,போலீஸ் காரர்கள் அனைவரும் குடும்பத்தை விட்டு விட்டு தீபாவளி பண்டிகையை தவிர்த்து விட்டு இங்கு குழந்தை மீட்க கஷ்டப்படுகிறார்கள் .சில ஜென்மங்கள் பாராட்ட மனமில்லாவிட்டாலும் குறை சொல்லக்கூடாது .டீவீடீர் ல் எழுதறவர்கள் இங்கு வந்து இருக்கணும் .திருமாவளவன் இந்த அரசு இந்த அளவுக்கு செய்கிறதை பாராட்டமனமில்லை அதை விட்டு விட்டு செவ்வாய் கிருகரத்திற்கும் ,நிலவுக்கும் சந்திராயன் விடுவதை சுட்டிக்காட்டுகிறார் .அவர் ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவர் .அண்ணன் வைக்கோ ஆளையே காணும் .ஆனால் அந்த சிறுவன் உயிரோடு மீட்கப்படவேண்டும் என்பதே என் விருப்பம் .கடவுள் அதை நிறைவேற்றவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X