கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விவசாயி இறக்க காரணமாக இருந்த டி.எஸ்.பி.,க்கு ரூ.5 லட்சம் அபராதம்

Added : அக் 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:விவசாயி இறக்க காரணமான, பெண், டி.எஸ்.பி.,க்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள, காமக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது தம்பி தியாகராஜன். இவர்களுக்கு, 16 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், அண்ணாமலையின் மகள் சாவித்திரி, நெல் பயிரிட்டிருந்தார். இந்த நிலம் தொடர்பாக, தியாகராஜனின் மகள் சாமுண்டீஸ்வரிக்கும், சாவித்திரிக்கும் இடையே தகராறு இருந்தது. கடந்த, 2017 டிசம்பரில், இப்பிரச்னை தொடர்பாக, சாமுண்டீஸ்வரி அளித்த புகாரில், ஆரணி, டி.எஸ்.பி., ஜெரினாபேகம் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.பயிர்கள் சேதம்டி.எஸ்.பி., உத்தரவின்படி, டிராக்டர் ஏற்றி நெற்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டன. தடுத்த சாவித்திரியை போலீசார் கீழே தள்ளியதும், அவர் இறந்ததும், பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இது குறித்து, சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது.

சிவில் வழக்குவிசாரணை முடிவில், நீதிபதி துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:நில விவகாரம் தொடர்பாக, சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. தேவையில்லாமல், போலீசார் சிவில் பிரச்னையில் தலையிட்டுள்ளனர். போலீசார் நெற்பயிரை சேதப்படுத்தி, தரதரவென இழுத்து சென்றதால், சாவித்திரி மன உளைச்சலில் இறந்துள்ளார். போலீசாரின் சட்ட விரோத நடவடிக்கையால், சாவித்திரி உயிரிழக்க நேரிட்டது. இது, மனித உரிமை மீறல்.ஒவ்வொரு குடிமகனின் மனித உரிமைகளையும், பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. டி.எஸ்.பி., சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டு, மனித உரிமையை மீறி உள்ளார். எனவே, டி.எஸ்.பி.,க்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சாவித்திரியின் கணவர் கிருஷ்ணன் மற்றும் வாரிசுகள் நான்கு பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், டி.எஸ்.பி., மீது துறை ரீதியான, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
28-அக்-201900:41:06 IST Report Abuse
.Dr.A.Joseph DSP ஒரு சாவுக்கு காரணமாக இருந்துள்ளார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்து 14 வருடம் சிறையில் அடைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X