கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு,

Added : அக் 26, 2019
Advertisement
 சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு,

ஊட்டி:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், கார்பென்டராக பணிபுரிந்து வந்தவர், சேதுரகுபதி, 38. இவருக்கும், கணவனை இழந்த பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அப்பெண்ணுக்கு, 13 வயதில், ஒரு மகள் உள்ளார்.அடிக்கடி பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்த சேதுரகுபதி, சிறுமி தனியாக இருந்த போது, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தாயிடம் கூறியுள்ளார்.பெண்ணின் தாய் புகாரின்படி, 2017, ஜூனில், சேதுரகுபதியை, ஊட்டி அனைத்து மகளிர் போலீசார், கைது செய்தனர். ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்த வழக்கில், நேற்று முன்தினம், நீதிபதி முரளிதரன் தீர்ப்பளித்தார்.
சேதுரகுபதிக்கு, 'போக்சோ' சட்டத்தில், இரு பிரிவுகளில், தலா, 12 ஆண்டுகள், இரு பிரிவுகளில், தலா ஆறு ஆண்டுகள், மிரட்டிய வழக்கில் ஓராண்டு, வன்கொடுமை சட்டத்தில் ஓராண்டு என, மொத்தம், 38 ஆண்டுகள் சிறை, 8,000 ரூபாய் அபராதம் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X