எஸ்.ஐ., மண்டை உடைப்பு போதை ஆசாமிக்கு, 'காப்பு'

Added : அக் 26, 2019
Share
Advertisement

அரும்பாக்கம், :அரும்பாக்கத்தில், எஸ்.ஐ., மண்டையை, கல்லால் அடித்து உடைத்த, போதை ஆசாமியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.அரும்பாக்கம், 100 அடி சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' கடையில், நேற்று முன்தினம் இரவு, தகராறு நடப்பதாக, அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு, எஸ்.ஐ., தங்கதுரை, 37, விசாரிக்கச் சென்றார். அவர் விசாரித்து கொண்டிருந்த போது, திடீரென மது போதையில் இருந்த ஆசாமி ஒருவர், கல்லால் எஸ்.ஐ., மண்டையில் பலமாக தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த தங்கதுரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, அரும்பாக்கம் போலீசார், விசாரணை நடத்தினர்.இதில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்கி, 19, எஸ்.ஐ.,யை கல்லால் அடித்தது தெரிய வந்தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X