பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைக்குள் மீட்புப் பணிகள் நிறைவடையும் : அமைச்சர்

Updated : அக் 27, 2019 | Added : அக் 27, 2019 | கருத்துகள் (6)
Advertisement

திருச்சி : இன்றைக்குள் சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் நிறைவடையும் என நம்புகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் 44 மணி நேரத்தை கடந்து மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்,

மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். மீட்பு பணியில் 70 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடினமான பாறைகள் என்பதால் துளையிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள இயந்திரத்தை விட 3 மடங்கு வேகம் கொண்ட மற்றொரு இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதிர்வு ஏற்படும் என்பதால் வேகமாக செயல்பட இயலவில்லை.

குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை. நேற்றிரவு (அக்.,26) குழந்தையின் உடல் உஷ்ணம் சராசரியாக இருந்ததை அண்ணா பல்கலை., குழுவினர் கண்டறிந்துள்ளனர். மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. பாதுகாப்புடன் குழந்தையை மீட்க வேண்டும் என்பதால் கவனமுடன் செயல்படுகிறோம். சுற்றிலும் இடைவெளி இல்லாமல் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளான்.

நேற்று முதல் குழந்தையின் கையில் அசைவு தெரியவில்லை. ரோபோ கேமரா உள்ளே சென்று குழந்தையின் கையில் வெப்பத்தை பதிவு செய்தது. பண்டிகை என்பதையும் மறந்து இரவு பகலாக இடைவிடாது மீட்புப் பணியில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளோம். 88 அடியில் சிறுவன் சிக்கி உள்ள நிலையில் 21 அடி இதுவரை தோண்டப்பட்டுள்ளது. மேலும், கீழே செல்லாத வகையில் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் இன்றைக்குள் நிறைவடையும் என நம்புகிறோம், என்றார்.

வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், குழி தோண்டும் இயந்திரங்களின் உதிரி பாகங்கள் பழுது ஏற்பட்டால் அதை சரி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது. 98 அடி ஆழத்திற்கு தோண்டியப்பின் பக்கவாட்டில் ஒரு நபர் சென்று வருவதற்கு ஏற்றார்போல் துளையிட்டு குழந்தை மீட்கப்படும். பொதுமக்கள் கூடுவது மீட்புப் பணிக்கு தடையாக இருக்கும்; எனவே, மீட்பு பணிக்கான வாகனங்கள், ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கும் இடைஞ்சலாக இருக்கிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு ஊடகங்கள் வாயிலாக கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-201914:30:17 IST Report Abuse
Ramesh Kumar KULANDHAIKU GLUCOSE ETRA VAZHI IRUKKA ? YARUKAVADHU IDEA IRUKKA ?? NARAMBU KANDUPIDIPPADHU SAVAALA IRUKKUM NENAKKAREN.
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
28-அக்-201908:02:36 IST Report Abuse
Prem Kumar சிலர் தெரிந்தே செய்யும் தவறுகளாலும் அலட்சியத்தாலும் விபத்து வருகிறது என்பதை இளம் துளிர் சுஜீத் படும் துயர் நமக்கு உணர்த்துகிறது
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
28-அக்-201903:04:32 IST Report Abuse
Sam இவரு ஹெல்த் மினிஸ்டர் இல்லை குட்கா minister
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X