காந்தியுடன் மோடி; ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போன ஓவியம்

Updated : அக் 27, 2019 | Added : அக் 27, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Modi, Narendra Modi, PM, PM Modi, Prime Minister, Auction, Painting, Gandhi, Mahatma Gandhi, மோடி, நரேந்திர மோடி, பிரதமர், பிரதமர் மோடி, காந்தி, மகாத்மா காந்தி, ஓவியம், ஏலம்

புதுடில்லி: மகாத்மா காந்தியுடன் பிரதமர் நரேந்திர மோடி இருப்பது போல வரையப்பட்ட ஓவியம் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட 2,772 பொருட்களை மத்திய கலை மற்றும் கலாசாரத்துறை சார்பில், கடந்த செப்., 14ம் தேதி முதல் மின்னணு ஏலத்தில் விற்கப்பட்டு வருகின்றன. இந்த ஏலத்தில் வரும் தொகை முழுவதும் கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் டில்லியிலுள்ள தேசிய மாடர்ன் ஆர்ட் கேலரியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.




அதில், ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள், அழகிய கலைப்பொருட்கள், சிலைகள், பொன்னாடைகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அக்., 3ம் தேதியுடன் நிறைவுபெறுவதாக இருந்த ஏலம், மேலும், 3 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் (அக்.,26) அனைத்து பொருட்களும் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




இந்த நினைவுப் பரிசுகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 500ம், அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சமும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டன. அதில் இந்திய தேசிய கொடியின் பின்னணியில் மகாத்மா காந்தியுடன், மோடி இருக்கும் ஓவியம் ரூ. 25 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனது தாயாரிடம் மோடி ஆசி பெறும் படம், ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் போனது. 14 செ.மீ., உயரம் கொண்ட சுவாமி விவேகானந்தர் சிலை ரூ. 6 லட்சத்துக்கு விலை போனது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
28-அக்-201914:12:03 IST Report Abuse
J.Isaac காந்திஜியை உட்கார வைத்து மோடிஜியை நிற்க வைத்து ஓவியம் வரைந்திருந்தால் அதுதான் காந்திஜிக்கு கொடுக்கிற மரியாதை.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
28-அக்-201911:48:17 IST Report Abuse
J.Isaac காந்திஜியை உட்காரவைத்து மோடிஜி நின்றுகொண்டிருந்தால் நன்றாயிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-அக்-201921:48:33 IST Report Abuse
Pugazh V ஒண்ணா இருக்கற மாதிரி ஓவியம் வரைந்ததுமே, காந்தி யை போட்டு தள்ளினவங்க இல்லை என்று ஆகிவிடுமா என்ன?? காந்தி கூட சாயா குடிக்கற மாதிரி போட்டோஷாப் பண்ணினாக் கூட கொன்னது கொன்னது தானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X