பொது செய்தி

இந்தியா

மலேஷியா, துருக்கிக்கு புகட்டிய பாடம் :காஷ்மீர் விஷயத்தில் இந்தியா கொடுத்த பதிலடி

Updated : அக் 30, 2019 | Added : அக் 28, 2019 | கருத்துகள் (44)
Advertisement
 மலேஷியா, துருக்கி, இந்தியா,மோடி, பதிலடி

தேச நலனுக்கு எதிராக இருக்கும் மத்திய கிழக்கு நாடான துருக்கி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவுக்கு, இந்தியாவின் பொருளாதார வலிமை மற்றும் உலக அரங்கில் உள்ள முக்கியத்துவத்தை, பிரதமர் நரேந்திர மோடி அரசு காட்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதற்கு, நம் அண்டை நாடான பாக்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு சர்வதேச அமைப்புகளில் பிரச்னைகள் எழுப்ப முயன்று, தோல்வியில் முடிந்தன.

அமெரிக்காவின், நியூயார்க் நகரில், கடந்த மாதம் நடந்த, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, துருக்கி மற்றும் மலேஷியா கருத்து தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, அந்த நாடுகளை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமானது.

நம் தேச நலனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், அந்த நாடுகளுடனான உறவில், பிரதமர் மோடி அரசின் நிலைப்பாடு மாறியது. மத்திய கிழக்கு நாடான துருக்கியுடன், பாதுகாப்புத் துறையில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன. பயங்கரவாதத்துக்கு எதிரான, நிதி நடவடிக்கைகள் குழுவின் கூட்டத்தில், பாக்.,குக்கு ஆதரவாக, துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டோகன் செயல்பட்டார். மேலும், ஐ.நா., கூட்டத்திலும், காஷ்மீர் விவகாரத்தை விமர்சித்தார்.


ஒப்பந்தம் நிறுத்தம்


அதைத் தொடர்ந்து, துருக்கிக்கு இந்த மாதத்தின் துவக்கத்தில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை, பிரதமர் மோடி அதிரடியாக ரத்து செய்தார். அதைத் தவிர, நம் கடற்படைக்கு, ஐந்து பெரிய போர்க் கப்பல்கள் தயாரிக்கும், 1,600 கோடி ரூபாய் ஒப்பந்தம், துருக்கி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது. அதையும், மோடி அரசு நிறுத்தி வைத்தது. இதைத் தவிர, துருக்கிக்கான ஆயுதம் மற்றும் தளவாடங்கள் ஏற்றுமதியும் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல், தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின், 94 வயதாகும் பிரதமர், மகாதீர் பின் முகமது, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்து, ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பேசினார். அங்கேயே அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது.


பாமாயில் வாங்குவது நிறுத்தம்


அதைத் தொடர்ந்து, அடிவயிற்றில் கைவைக்கும் நடவடிக்கைகளை, மோடி அரசு எடுத்தது. பாமாயில் ஏற்றுமதி தான், மலேஷியாவுக்கு முக்கியமான வருவாய். இந்தாண்டில், ஜனவரி முதல் செப்., வரை, 39 லட்சம் டன் பாமாயிலை மலேஷியாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இது இரண்டு மடங்கு.

தற்போது, மலேஷியாவிடம் இருந்து பாமாயில் வாங்குவது நிறுத்தப்பட்டு, இந்தோனேஷியா, அர்ஜென்டினா, உக்ரைனிடம் இருந்து வாங்கப்பட்டு வருகிறது.இந்த நடவடிக்கைகள் மூலம், தமது தேச நலனுக்கு எதிராக செயல்பட்டால், அதை ஏற்க முடியாது என்பதை, உலக நாடுகளுக்கு, பிரதமர் மோடி அரசு உரக்க கூறியுள்ளது.

சர்வதேச அளவில் பொருளாதாரத்திலும், அந்தஸ்திலும் மிகவும் வலுவாக உள்ளதால், இந்தியாவிடம் மோதுவது தங்களுக்கு சரியல்ல என்பதை இந்த நாடுகள் தற்போது உணர்ந்திருக்கும். அதை மற்றவர்களுக்கும் உறைக்கும்படி, துணிந்து மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Robins - Chennai,இந்தியா
31-அக்-201906:46:28 IST Report Abuse
Robins மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் இங்கே வருவதை நிறுத்தினால் போதும் ... மலேசியர்கள் அடங்குவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-அக்-201916:49:01 IST Report Abuse
Endrum Indian மிக மிக சரியான நடவடிக்கை??இதனால் அவர்கள் மாறுகின்றார்களோ இல்லையோ அதை பற்றி நாம் கவலை பட தேவையில்லை??ஆனால் இப்பொழுதாவது இந்தியா ஒருபோதும் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களை சும்மா விடாது என்று தெரியவரும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
30-அக்-201915:26:32 IST Report Abuse
Tamilan "சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளதால்" அப்படியா. 2014, ல் உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் GDP, 5, இடத்தில் இருந்ததது அதாவது 2.039TrillionUS$, ஆக இருந்தது. மோடியின் 6, ஆண்டு ஆட்சியில் அது 2.77TrillionUS$ ஆக மட்டுமே உயர்ந்து உள்ளது, அது மட்டும் அல்ல, உலக அளவில் 5, ஆவது இடத்தில் இருந்து, ஏழாவது இடத்திற்கு இரங்கி உள்ளது. கடந்த 6, ஆறு ஆண்டுகளில் 2,கோடி பேர் வேலை இழந்து உள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் 1, லட்சம் சிறு தொழில்கள் மூடப்பட்டு உள்ளது. விவசாயிகள் தற்கொலை இரு மடங்கு ஆகி உள்ளது. இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள். ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிப்பு, Reserve, Bank, ல் இருந்து 1.76,லட்சம் கோடி ரூபாய், 30, டன் தங்கம் பெறப்பட்டு உள்ளது.
Rate this:
Share this comment
vivek c mani - Mumbai,இந்தியா
31-அக்-201900:01:55 IST Report Abuse
vivek c maniஅதாவது 67 வருட உழைப்பினால் வந்த நிலை US$ 2.039Trillion 6 வருட முயற்சியில் மேற்கொண்டு மேலும் US $76 .961 டிரில்லியன். ஐந்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்போமா , முறையாக வகுத்து எது வளர்ச்சி என கண்டுபிடிக்க ....
Rate this:
Share this comment
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
31-அக்-201908:57:52 IST Report Abuse
Dinesh PandianGDP யை பார்க்க கூடாது . GDP PPP பாருங்கள் . இந்திய நாடு மூன்றாம் இடத்தில உள்ளது. உலக வங்கியின் அறிக்கை இது...
Rate this:
Share this comment
Tamilan - Doha,கத்தார்
31-அக்-201917:06:21 IST Report Abuse
Tamilan2.77, TrillionUS$ இருந்து 2.039, TrillionUS$, கழித்தால் வருவது 76.961, TrillionUS$...
Rate this:
Share this comment
Tamilan - Doha,கத்தார்
31-அக்-201917:19:06 IST Report Abuse
TamilanGDP-PPP, World, Bank, அறிக்கை 2018, ல் வெளி இட்டது. அதில் QATAR, முதலாவது இடத்தில் 130,475, US$. இந்தியா 119, வது இடத்தில் 7874, US$ ல் உள்ளது,...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X