அவங்க மட்டும் காஷ்மீர் போகலாமா; கேள்வி எழுப்பும் காங்.,

Updated : அக் 28, 2019 | Added : அக் 28, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய தலைவர்களை அங்கு அனுமதிப்படாத நிலையில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்களுக்கு மட்டும் அனுமதிப்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆக., 5ல் ரத்து செய்யப்பட்டது.

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய தலைவர்களை அங்கு அனுமதிப்படாத நிலையில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்களுக்கு மட்டும் அனுமதிப்பது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆக., 5ல் ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைதொடர்பு துண்டிப்பு, அரசியல் கட்சி தலைவர்கள் காஷ்மீர் செல்ல தடை என கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால் கட்டுபாடுகள் படிபடியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால், கட்சி தலைவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்றளவும் விளக்கப்படவில்லை.


latest tamil news



இந்நிலையில் காஷ்மீரில் களநிலவரத்தை அறிவதற்காக 28 பேர் கொண்ட ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 28 எம்.பி.,க்கள் குழுவினர், இந்தியாவுக்கு வந்துள்ளனர். இன்று (அக்.,28) பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த இவர்கள், நாளை காஷ்மீர் செல்ல உள்ளனர். இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பதிவில், ஜம்மு காஷ்மீருக்கு இந்திய தலைவர்கள் செல்வதற்கு மத்திய அரசு மறுத்திருக்கிறது. ஆனால், ஐரோப்பிய யூனியன் எம்.பி.,கள் செல்ல மட்டும் அனுமதிப்பது, நாடாளுமன்றத்தையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயல், என பதிவிட்டுள்ளார்.



latest tamil news



இதேபோன்று காங்., செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில், இந்தியர்கள், ஜம்மு - காஷ்மீர் செல்ல வேண்டும் என்றால் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும். ஆனால், ஐரோப்பிய எம்.பி.,கள் அங்கு செல்ல மோடி அழைப்பு விடுக்கிறார். ஏன் இந்த பாரபட்சம், என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-அக்-201903:58:38 IST Report Abuse
J.V. Iyer அவர்கள் யாரும் தேச துரோகிகள் அல்லர். பாக்கிகளுக்கு பால் வார்க்கும் அடிமைகளுக்கு இந்த ஆசை கூடாது.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
29-அக்-201912:37:26 IST Report Abuse
Rafi இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது, ஏற்கனவே நம் பிரதிநிதிகள் சிறிலங்காவிற்கு சென்றுவந்தார்கள், மக்களை தூரத்திலிருந்து பார்க்கலாம், வரும் தலைவர்களிடம் அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்ல கூடாதவாறு அச்சுறுத்தல் பட்டிருந்த தகவல்கள் நாம் ஏற்கனவே பெற்றிருந்தோம். நம் அரசியல் தலைவர்களை கண்டால் உரிமையோடு நிலவரத்தை சொல்லக்கூடும். இதன் வேறுபாடுகள் அரசுக்கு தெரியாதா?
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
29-அக்-201912:14:19 IST Report Abuse
 N.Purushothaman தீவிரவாதிகளுக்கு அங்க என்ன வேலை ? ராணுவ நடவடிக்கைக்கே ஆதாரம் கேட்ட அல்ப பயலுக தானே நீங்க ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X