பெரம்பலுார் : அரியலுார் அருகே, பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் இருந்த, இரண்டு ஆழ்துளை கிணறுகளை, மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டரை, பொதுமக்கள் பாராட்டினர்.திருச்சி, மணப்பாறை அருகே, நடுக்காட்டுபட்டியில், ஆழ்துளை கிணற்றில் சுஜீத் என்ற 2, வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது.இதையடுத்து, அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார், கிராமங்களில் திறந்த வெளியில், பாதுகாப்பற்ற முறையில் ஆழ்துளை கிணறுகள் உள்ளதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு, போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, அக்னேஸ்வரம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான உபயோகமற்ற இரண்டு ஆழ்துளை கிணறுகளை, மக்கள் உதவியுடன் முன்னெச்சரிக்கையாக மூடினர். உபயோகமற்ற பாதுகாப்பற்ற முறையில் இருந்த, இரண்டு ஆழ்துளை கிணறுகளை, இரவோடு இரவாக மூடிய இன்ஸ்பெக்டரை, பொதுமக்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE