லஞ்சம் வாங்க அதிகாரி, 'தகிடுதத்தம்' வஞ்சம் தீர்க்க காத்திருக்கும் 'ரத்தத்தின் ரத்தம்'

Added : அக் 29, 2019 | |
Advertisement
பாவளி முடிந்த நிலையில், சித்ராவும், மித்ராவும், கந்த சஷ்டி துவக்கத்தை முன்னிட்டு, சிவன்மலை கோவிலுக்கு புறப்பட்டனர்.''பல நாட்களாக எதிர்பார்த்த தீபாவளி, வந்ததும் தெரியல; போனதும் தெரியல. ஆனா, 'செம' ஜாலியாக இருந்ததில்ல, மித்து,''''ஆமாக்கா... உண்மைதான். ரொம்பவும் 'என்ஜாய்' பண்ணங்க்கா...'' என்ற மித்ரா, ''ஏக்கா... 'மாஜி' மேல, கலெக்டரிடம் கொடுத்த புகார் என்னாச்சு?''
 லஞ்சம் வாங்க அதிகாரி, 'தகிடுதத்தம்' வஞ்சம் தீர்க்க காத்திருக்கும் 'ரத்தத்தின் ரத்தம்'

பாவளி முடிந்த நிலையில், சித்ராவும், மித்ராவும், கந்த சஷ்டி துவக்கத்தை முன்னிட்டு, சிவன்மலை கோவிலுக்கு புறப்பட்டனர்.''பல நாட்களாக எதிர்பார்த்த தீபாவளி, வந்ததும் தெரியல; போனதும் தெரியல. ஆனா, 'செம' ஜாலியாக இருந்ததில்ல, மித்து,''''ஆமாக்கா... உண்மைதான். ரொம்பவும் 'என்ஜாய்' பண்ணங்க்கா...'' என்ற மித்ரா, ''ஏக்கா... 'மாஜி' மேல, கலெக்டரிடம் கொடுத்த புகார் என்னாச்சு?'' ஆர்வமாக கேட்டாள்.''அந்த மனுவை, கலெக்டர், போலீசுக்கு 'பார்வேர்ட்' பண்ணிட்டாரு. அதிகாரி விசாரிச்சாராம். லஞ்சம் கொடுத்து அரசு வேலை வாங்கனும்னு நினைக்கறது தப்பு, ஆதாரம் இருக்கானு கேட்டாராம். 'மொபைலில்' பேசினது மட்டும்தான் சொன்னதுக்கு, சரி பார்க்கலாம்னு,' அனுப்பிட்டாங்களாம்,''''சொந்த கட்சிக்குள்ளயே இப்படி பண்ணா எப்படிடி'' என்றாள் சித்ரா.''அதைத்தான் நானும் கேட்கிறேன். இதனாலதான், 'மாஜி'க்கு செல்வாக்கு சரியுது. அதை விடுங்க்கா, எப்படியோ மெடிக்கல் காலேஜ் வந்திடுச்சு,''''யெஸ் மித்து. மாவட்டம் ஆனதில் இருந்து, 10 வருஷமா கோரிக்கை வச்சுட்டு இருந்தாங்க. விடாம கேட்டு வாங்கிட்டாங்களே. அதுவும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கறதுக்கு முன்னாடி, இந்த அறிவிப்பு வந்தது, ஆளுங்கட்சி கூட்டணிக்கு 'பிளஸ்'ஆக இருக்குமா?''''அதோடில்லாமல், இடைத்தேர்தல் வெற்றியும், ஆளுங்கட்சிக்காரங்களை சுறுசுறுப்பாக மாத்திடுச்சு. அதனால, உள்ளாட்சியில, மேயர் உட்பட பல முக்கிய பதவிகளுக்கு, 'சீட்'களை மொத்தமாக தங்களோட ஆட்களுக்கு வளைச்சு வாங்கிடணும்னு, 'சவுத்தும், நார்த்தும்' தீயாய் வேலை செய்றாங்களாம்,''''அதேமாதிரி, 'மாஜி'யும் மேயருக்கு தீவிரமா காய் நகர்த்துறாராம். இதனால, கோஷ்டி பூசல், இன்னும் அதிகமாயிடும் பாரேன். போதாக்குறைக்கு, 'சிவ'மான 'மாஜி'யும், கட்சிக்குள் 'ரீ-என்ட்ரீ' ஆயிட்டாரு. பழைய பகையை மனசில் வச்சு செய்ய காத்திருக்கிறதாக கேள்வி,''''அப்போ, கோஷ்டிகானம் இன் னும் சத்தமா கேட்கும்னு சொல்லுங்க,'' என்று கூறி சிரித்தாள் மித்து.வண்டியை சீரான வேகத்தில் ஓட்டிய சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊரில், 10 கோடி ரூபாய் எஸ்டிமேட்டில், ரோடு விரிவாக்கம் செய்ற வேலையை, திருச்சியை சேர்ந்த ஒரு கான்ட்ராக்டர் எடுத்திருக்கிறார். ஆனால், வேலை அரைகுறையா இருக்கு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே முடிக்க வேண்டிய வேலைய, இன்னும் முடிக்கலையாம்,''''ஆமாங்க்கா... சொன்னாங்க. அந்த கான்ட்ராக்டர், 'சபா'வுக்கு தோஸ்துதாம். அதனால, அதிகாரிகளாலும் எதுவும் செய்ய முடியலயாம்,'' என்ற மித்ரா, ''யூனியன் ஆபீசில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடந்ததும், கலெக்டர் ஆபீசில், ஆபீசர்கள் சிலர் உஷாராகி, வைட்டமின் 'ப'வை எஸ்கேப் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''தீபாவளி நேரத்தில், கலெக்டர் ஆபீசில் ரெய்டு நடத்தினால், பல பண 'முதலை'கள் மாட்டும்னு, லஞ்ச ஒழிப்பு போலீசார் 'பிளான்' போட்டாங்க. யூனியன் ஆபீஸ் மேட்டர் தெரிஞ்சதும், சிலர் தெறிச்சுட்டாங்களாம். அப்படியிருந்தும் கூட, கலால் துறையில், பணத்தை பிடிச்சுட்டாங்க,''''இதில, ஒரு 'ஷாக்'கான விஷயம் என்னன்னா, அந்த துறையை சேர்ந்த 'சாரதி' ஒருத்தர்கிட்ட, 'பார்'ஓனர்களின் மொபைல் நெம்பர் பட்டியல் இருந்துச்சாம். அதைப்பார்த்து, போலீசார் 'ஷாக்' ஆயிட்டாங்களாம். அவர்தான், எல்லா அதிகாரிகளுக்கும் கரெக்டா 'மாமூல்' வாங்கி கொடுக்கறாராம்,'' என்று விளக்கினாள் சித்ரா.அப்போது, 'சண்முகா' காபி ஹவுஸ் என்ற போர்டு தென் படவே, ''மித்து, காபி குடிச்சிட்டு போலாமா?'' என, சித்ரா கேட்ட தற்கு, ''ஓ..யெஸ்,'' என்றாள் மித்ரா.இருவரும் காபி குடித்து விட்டு, மீண்டும் புறப்பட்டனர்.''ஒரு அதிகாரியே, கூட்டு சேர்ந்து 'லாட்டரி' விற்கிறாராம்?'' என்றாள் சித்ரா.''அடக்கொடுமையே... இது எங்கீங்க்கா?''''வெண்ணெய்க்கு பேமஸ் ஆன ஊர் ஸ்டேஷனில்தான். அவரும், பக்கத்திலுள்ள கிராமத்தை சேர்ந்தவரும் இணைஞ்சு, லாட்டரி ஓட்டறாங்களாம். இதோடில்லாம, தீபாவளிக்கு, தன்னோட 'சாரதி'யையும், சொந்தக்கார போலீசையும், களமிறக்கி, லட்சக்கணக்கில் வசூலை அள்ளிட்டாராம்''''நானும் கேள்விப்பட்டிருக்கேன். அந்த அதிகாரி, இப்படித்தான் வசூலில் கொடிகட்டி பறந்தாலும், ஒருத்தராலும் ஒண்ணும் பண்ண முடியலையாம். முக்கியமான 'வி.ஐ.பி.,' ஒருத்தர், அவருக்கு 'சப்போர்ட்'டாம். இது மாவட்ட அதிகாரி கவனத்துக்கு போனாத்தான், 'ஆக்ஷன்' இருக்கும்னு, அந்த ஸ்டேஷன் போலீசே பேசிக்கிறாங்க...'' என, தனக்கு தெரிந்தவற்றை கூறினாள் மித்ரா.''சரி... போலீஸ்தான் இப்படின்னா, யூனியன் ஆபீசில் ஒரு அதிகாரி, டியூட்டி டைமில், 'சரக்கு' அடிச்சாராம். உனக்கு தெரியுமா, மித்து?''''என்னக்கா சொல்றீங்க? எனக்கு, தெரியாதே!''''தை மாதம் கொண்டாடப்படும் பண்டிகையின் பேரை, ஊரில் கொண்ட யூனியன் ஆபீசில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு அதிகாரியும், அவரோட டிரைவரும் சேர்ந்த, 'டியூட்டி' நேரத்தில், ஆபீசுக்குள் ஜாலியாக 'சரக்கு' அடிச்சாங்களாம்,''''இதை ஒருத்தரு வீடியோ எடுத்து, பரப்பிட்டாராம். ஆனா, இதுவரை ஒரு 'ஸ்டெப்'பும், யாரும் எடுக்கலையாம். ஆனா, சம்பந்தப்பட்ட அதிகாரி, இன்னும் 'தெனாவட்டா' சுத்திட்டுத்தான் இருக்காராம்,'' என்ற சித்ரா, அவ்வழியே தென்பட்ட 'மனோகரா' என்ற சினிமா போஸ்டரை படித்தபடியே வண்டியை ஓட்டினாள்.காங்கயம் ஊராட்சி ஒன்றியம் தங்களை வரவேற்கிறது என்ற போர்டு தென்பட்டது. அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா... வாங்குற பழக்கத்தை மாத்த முடியாம, ஆபீசில் இருந்த போர்டை துாக்கி வீசிட்டாங்களாம்,'' என பொடி வைத்து பேசினாள்.''எந்த ஆபீஸ்.. என்ன மேட்டர்டி?''''இந்த ஊரிலுள்ள, தாலுகா ஆபீசில்தான். உள்ளே போனதும், முன் பகுதியில், 'லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்' என்ற போர்டும், லஞ்சம் தொடர்பாக புகார் கொடுக்க வேண்டிய மொபைல் போன் நெம்பருடன் இருந்தது,''''சரி... அது நல்ல விஷயம்தானே...!''''அக்கா... முழுசும் கேளுங்க. அந்த ஆபீசுக்கு சமீபத்தில் வந்த அதிகாரி பொறுப்பேற்றவுடன், நிலைமை தலைகீழா மாறிடுச்சாம். வைட்டமின் 'ப' இல்லாம எந்த வேலையும் நடக்குறதில்லையாம். சில நாட்களுக்கு முன், ஆபீஸில் இருந்த 'லஞ்ச விழிப்புணர்வு' போர்டை துாக்கி, 'கடாசி'ட்டாங்களாம்,''''இது தெரிஞ்ச, ஒன்றிரண்டு நேர்மையான ஆபீசரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்களாம். லஞ்ச ஒழிப்பு துறைக்கு இது தெரியுங்களா?''''இல்ல... மித்து, தெரிஞ்சிருக்காது. கண்டிப்பா, நடவடிக்கை எடுப்பாங்க. பொறுத்திருந்து பாரேன். 'புனித'மான அரசு பணியை, இதுபோன்ற ஆபீசர்கள்தான், கேவலப்படுத்துறாங்க,'' என்ற சித்ரா, கோபத்தில் வண்டியை முறுக்கினாள். அப்போது, சில மீட்டர் துாரத்தில், 'கந்தன் பாதம் கனவிலும் காக்கும்' என்ற போர்டு, சிவன்மலைஅடி வாரத்தில் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X