80 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி; சுஜித் உயிரிழப்பு

Updated : அக் 30, 2019 | Added : அக் 29, 2019 | கருத்துகள் (175)
Advertisement
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் தெரிவித்தார். 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர், சுஜித் உடல், பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.சிறுவனை மீட்க
#savesujith,sujith,குழந்தை,சுஜித்,உயிரிழப்பு,dinamalar,தினமலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் தெரிவித்தார். 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது. பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர், சுஜித் உடல், பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவனை மீட்க 80 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்பு போராட்டம் தோல்வியில் முடிந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil newsதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்து நான்கு நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மீட்புப்பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், இன்று (அக்.,29) அதிகாலை 2.20 மணிக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து அழுகிய வாடை வந்தது. குழந்தையின் கை சிதைந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு , மருத்துவக் குழுவினரின் ஆய்வுக்கு பின் சுஜித் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடலை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement
பிரேத பரிசோதனை


இதனையடுத்து சுஜித்தின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இடுக்கி போன்ற கருவி தயார் செய்யப்பட்டது. பேரிடர் மீட்புக்குழுவினர் 88 அடி ஆழத்தில் குழந்தை சுஜித்தின் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை, சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.


latest tamil news

சிறுவன் விழுந்த இடத்தில் நவீன பாறை உடைக்கும் இயந்திரம் மூலம் புதிதாக குழிகள் தோண்டப்பட்டது.


இறுதிச்சடங்கு


பிரேத பரிசோதனைக்கு பின்னர், சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடந்தது. பின்னர், உடல் அடக்கம் செய்யப்பட்டது.


ஆழ்துளை கிணறு மூடல்


சுஜித் விழுந்து உயிரிழந்த ஆழ்துளை கிணறு, கான்கிரீட் கலவை கொண்டு உடனடியாக மூடப்பட்டது.


ஆழ்துளை கிணறுகள் மூடப்படும்


திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. சிறப்பு கருவிகள் மூலம் அவனது உடல் வெளியே எடுக்கப்பட்டது. சுஜித் எப்போது உயிரிழந்தான் என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும். இங்கிருக்கும் இரண்டு ஆழ்துளை கிணறுகளும் சிமெண்ட் கான்கிரீட் கொண்டு மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


5 நாள் 'உயிர்' போராட்டம்


திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களின் 2 வயது மகன் சுஜித் வில்சன், தன் வீட்டின் அருகில் பயனில்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் அக்.,25ம் தேதி மாலை 5.30 மணியளவில் விழுந்தான். தகவலறிந்து மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சுஜித், சுமார் 20 அடி ஆழத்தில் இருப்பது தெரியவந்ததை அடுத்து, பல்வேறு மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.


latest tamil newsகுழந்தை சுவாசிப்பதற்கு ஏற்றார் போல், தொடர்ந்து ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டும் பணியும் தொடங்கப்பட்டது. ஆனால், கடினமான பாறைகள் இருந்ததால் அதிலும் சிக்கல் ஏற்பட்டது. குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், கண்காணிப்பதற்கு கேமராவும் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு முயற்சியின் போதும் தோல்வியுற்று, குழந்தை சில அடிகள் கீழிறங்கியதால், 20 அடியில் சிக்கிய குழந்தை 88 அடிக்கும் கீழ் சென்றான்.


latest tamil newsபல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிய, இறுதி முயற்சியாக ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் அதிநவீன 'ரிக்' இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும், கடின பாறைகளால் தாமதமானது. இறுதியில் 80 மணி நேர மீட்புப்பணி பலனளிக்காமல், குழந்தை சுஜித் உயிரிழந்தான்.

Advertisement
வாசகர் கருத்து (175)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
03-நவ-201910:23:15 IST Report Abuse
oce அந்த போர் வெல் கிணற்றை தோண்டியவர் அந்த இடத்தில் பாறைகள் உள்ளதா இல்லையா என்பதை பரிசோதனை செய்த பின்னரை அதை தோண்டி இருக்க வேண்டும். குழந்தையை மேலெடுக்கும் முயற்சியில் பின் வாங்கியதற்கு பூமியின் ஆழத்தில் இருக்கும் பெரும் பாறைகளை காரணமாக சொல்கின்றனர்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
03-நவ-201910:15:50 IST Report Abuse
oce தினமலர் இதழில் ஒரு பெட்டி செய்தி வந்துள்ளது. இதில் இறந்து போன குழந்தையின் உறவினர் ஒருவர் இதே குழியில் விழுந்து உயிர் இழந்ததாக குறிப்பு இடப்பட்டுள்ளது. இந்த விவரத்தை சென்னை எம்.எஸ். ரகுநாதன் என்பவர் கருத்தாக இப்பலகையில் கூறி இருக்கிறார். இந்த பெட்டி செய்தி என்று வெளியிடப்பட்டது. அப்போதும் இந்த குழந்தையின் தந்தை இந்த ஆழ் துளை கிணறை மூடவில்லை. இதைப்பற்றி ஒரு ஊடக செய்தியாளரும் கூறவில்லை. இந்த மரணத்திற்கு அந்த குழந்தையின் தந்தையே காரணம். பொதுவாக வீடுகளில் தோண்டும் ஆழ் துளை கிணறுகளுக்கு நாலரை இஞ்ச் குழாய்களை புதைப்பார்கள். அதில் குழந்தைகள் விழ வாய்ப்பில்லை. மேலே உள்ள தினமலர் பெட்டி செய்திப்படி அந்த குழியில் ஒரு பெரிய ஆளே விழுந்து இறந்திருக்கிறார் என்றால் குழியில் பொறுத்தப்பட்டிருந்த கேசிங் பைப்பை எவரோ கழற்றி எடுத்து சென்றிருக்கலாம். அல்லது அந்த குழந்தையின் தந்தையே கூட கழற்றி வைத்திருக்கலாம். அதனால் அந்த போர்வெல் துளை மழை அல்லது பயிருக்கு பாய்ச்சிய நீரால் நாளடைவில் அகண்டு பெரியதாகி உள்ளது. அதன் பின்னரே ஒரு பெரிய ஆளும் அதில் விழுந்து இறந்துள்ளார். இவ்வளவு விஷயங்கள் நடந்தும் அந்த குழியை மூடாமல் விட்ட அதன் பொறுப்பாளரே குற்றவாளி. மேலே உள்ள படத்தில் குழந்தை விழுந்துள்ள குழியில் பைப்பை காணவில்லை. ஆழ்துளையில் இறக்கிய பைப் எங்கே. அதன் குறுக்களவு எவ்வளவு. கேசிங் பைப்பை அதிலிருந்து அகற்றியதற்கு காரணம் என்ன. அகற்றியவர் யார். எப்போது அகற்றப்பட்டது. அதில் ஏற்கனவே விழுந்து இறந்தவரின் விவரம் என்ன. அவர் யார். எப்படி அவர் அக்குழியில் விழுந்து இறந்தார். அவர் இறப்பு தற்கொலையா அல்லது பிறரால் ஏற்பட்டஉயிரிழப்பா. அவரை எப்படி மேலே எடுத்தனர். இவ்வளவு விஷயங்கள் வெளி வராமல் அந்த மர்ம குழிக்குள் முடங்கியுள்ளன. அந்த ஆழ்துளை கிணறு தோண்டியவரை லாடம் கட்டினால் பல உண்மைகள் வெளி வரும்.
Rate this:
Cancel
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
30-அக்-201900:11:58 IST Report Abuse
NewIndia_DigitalIndia ஜெயா மரணம் போல இதிலும் பல மர்மங்கள் உள்ளது. உடலை யாருமே பார்க்கவில்லை? சில பகுதிகள் மட்டுமே பிச்சி எடுக்கப்பட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X