போப்புக்கு கேரள கன்னியாஸ்திரி கடிதம்!

Updated : அக் 29, 2019 | Added : அக் 29, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
கொச்சி: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய கிறிஸ்துவ பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக நீக்கப்பட்டுள்ள, கேரள கன்னியாஸ்திரி, போப்பிடம் தன் நிலையை விளக்க அனுமதி கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளார்.பலாத்கார புகார்:கேரளாவிலுள்ள சர்ச்சில் பணியாற்றிய, கிறிஸ்துவ பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார்
kerala,கேரளா,nun,letter,Pope, dinamalar, தினமலர்

கொச்சி: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய கிறிஸ்துவ பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக நீக்கப்பட்டுள்ள, கேரள கன்னியாஸ்திரி, போப்பிடம் தன் நிலையை விளக்க அனுமதி கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளார்.


பலாத்கார புகார்:


கேரளாவிலுள்ள சர்ச்சில் பணியாற்றிய, கிறிஸ்துவ பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறினார். பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி, கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லுாசி கோலப்புரா மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை கன்னியாஸ்திரி பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான வாடிகனில் உள்ள, உயர்நிலைக் குழு, இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. அப்போது, இறுதி மேல்முறையீட்டு அமைப்பில் மேல்முறையீடு செய்ய, அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
எதிர்பார்ப்பு:


இது தொடர்பாக, வாடிகனுக்கு, லுாசி கோலப்புரா கடிதம் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: பாதிரியார் மீதான பாலியல் புகார் தொடர்பான விவகாரம், மிகப் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், புகார் கூறியவர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். என்னுடைய தரப்பு வாதத்தை நேரில் முன்வைக்க, வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும், போப் முன் ஆஜராகி, அவரிடம் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-அக்-201916:01:42 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எதற்காக இவர்கள் வாடிகனுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அந்த அமைப்பை விட்டு வெளியில் வாருங்கள். வழக்கை நடத்த சமூக நல/ பெண்கள் நல அமைப்புகளிடம் உதவி கேளுங்கள். அந்த கயவனுக்கு தண்டனை பெற்றுத்தாருங்கள்
Rate this:
Cancel
sam - Bangalore,இந்தியா
29-அக்-201914:28:44 IST Report Abuse
sam If it is Nithi or any other Hindu சாமியார் comments might have gone to 300 to 1000 messages.
Rate this:
Cancel
krishna - chennai,இந்தியா
29-அக்-201913:43:51 IST Report Abuse
krishna இதுல ஒரு முக்கிய விஷயம் உண்டி குலுக்கி பினராய் விஜயன் எவ்வளவு கமுக்கமா இந்த வாடிகன் கூட்டத்திடம் அடங்கி போறார் பாருங்க.ஒரு நடவடிக்கையும் இல்லை.அனால் சபரிமலையில் பெண்களை அனுப்புவதற்கு என்னமா பாடு பட்டார்.இதுதான் உண்டி குலுக்கி மற்றும் செகுலர் திருடர்களின் நிஜ முகம்.நம்ம சுடலை சைக்கோ குருமா எல்லாம் சுத்தமா SILENT ஆயிடுவாங்க.இதே ஹிந்து மதத்தில் இப்படி நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க இந்த செகுலர் திருடர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X