வாரிசு அரசியலில் கோலோச்சும் பவார் குடும்பம்

Updated : அக் 29, 2019 | Added : அக் 29, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
Sharad Pawar,family,patriarch,Pawar,dinamalar,தினமலர்

மும்பை: வரிசுகளை அரசியலில் திணிப்பதில், தேசிய வாத காங்., தலைவர் சரத் பவார் குடும்பம், முன்னிலையில் உள்ளது. அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.

நம் நாட்டில், அரசியல் தலைவர்கள், தங்கள் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு பெரிய பதவிகளை தருவது, காலம் காலமாக நடந்து வருகிறது. தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் குடும்பத்தினர், மஹாராஷ்டிரா அரசியலில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

சரத் பவார், ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். அவரது மகள், சுப்ரியா சுலே, லோக்சபா எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். சரத் பவாரின் உறவினரான அஜித் பவார், மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், பரமத்தி தொகுதியில் ஏழாவது முறையாக வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாகி உள்ளார். சரத் பவாரின் பேரன், ரோஹித் பவாரும், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.


latest tamil news



பவாரின் நெருங்கிய உறவினரான, ராணா ஜக்திசிங் பாட்டீலும், சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம், பவார் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், மக்கள் பிரதிநிதிகளாக உள்ளதாக, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
29-அக்-201915:20:50 IST Report Abuse
ezhumalaiyaan தமிழகத்திற்கு ஒரு கருணாநிதி,கர்நாடகத்திற்கு தேவே கவுடா ,மஹாராஷ்டிராவில் ஷரத் பவார்,ஆந்திராவில் சந்திரபாபு,தற்போது ஹரியானாவில் சவுதாலா,காஷ்மீரில் அப்துல்லா&கோ ,இப்படி இந்தியா முழுவதும் பெருச்சாளிகள் ராஜ்ஜியமாக உள்ளது .நாணயமான,படிப்பறிவுள்ள ஏழையோ அல்லது நடுத்தர வர்க்கத்தினர் அரசியலுக்கு எப்படி வரமுடியும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
29-அக்-201914:28:12 IST Report Abuse
A.George Alphonse பல்லுள்ளவன் பட்டாணி தின்பான் போல் இவர்களுக்கு இளிச்சவாய் மக்கள் உள்ளதால்மிக ஜாலியாக வாரிசு அரசியலில் ஜொலிக்கிறார்கள். நமது மாநிலத்தில் கருணாநிதி ஜொலிக்கவில்லையா.இன்னும் சிலர் இல்லையா.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
29-அக்-201912:17:17 IST Report Abuse
 N.Purushothaman பவாருக்கு பவர் மேல அப்படி ஒரு தீராத காதல் ...நம்மூரு கட்டுமர குடும்பம் போல .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X