சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுஜித் உடல் நல்லடக்கம்

Updated : அக் 30, 2019 | Added : அக் 29, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
ஆழ்துளை கிணறு, சுஜித், பிரேத பரிசோதனை, அஞ்சலி, உடல், நடுக்காட்டுப்பட்டி,dinamalar,தினமலர்

இந்த செய்தியை கேட்க

திருச்சி : ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பொது மக்கள், உறவினர்கள் அஞ்சலிக்கு பின்னர், பாத்திமாபுதூர் கல்லறையில் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


latest tamil newsதிருச்சி மாவட்டம் மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், 5 நாட்களுக்கு பின் இன்று (அக்.,29) அதிகாலையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


latest tamil news
பிரேத பரிசோதனை


பிரேத பரிசோதனை முடிந்தபின், சவப்பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்ட சுஜித்தின் உடலுக்கு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உதயகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil newsகுழந்தையின் பெற்றோர் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்கடித்தது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. நடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள புதூர் கல்லறையில் சுஜித்தின் உடலுக்கு உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரார்த்தனை நடந்தது. இதன் பின்னர், சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
29-அக்-201922:53:48 IST Report Abuse
வல்வில் ஓரி குழி தோண்டி மூடாம இருந்தவருக்கு இருவது லச்சம் கிடைக்குது ங்கிறது நல்லாயில்ல. இதே குழியில் வேற வூட்டு புள்ளை விழுந்தா ? ..இதென்னடா ஒங்க நாயம்? ரெம்ப குனியாதே அரசே .. சிறுபான்மைன்னு..சுடலை காசை அள்ளி வீசி கவர பாக்குறாப்டி ..நீங்களும் அதே தவறை செய்யாதீங்க. சட்டம் என்ன சொல்லுதோ அது போறது தான் முறை ..
Rate this:
Vetri Vel - chennai,இந்தியா
30-அக்-201900:54:10 IST Report Abuse
Vetri Velகுழந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.....
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
30-அக்-201907:05:43 IST Report Abuse
Rangiem N Annamalaiவல்வில் ஓரி சொல்வது சரி.அரசாங்கம் ஒரு சிறு தொகை கொடுத்தால்சரி .தவறுக்கு சன்மானம் எதற்கு ?....
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
29-அக்-201921:24:04 IST Report Abuse
வல்வில் ஓரி இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு துயர சம்பவத்தை மூணு நாள் லைவ் ரிலே பண்ணி டி ஆர் பி ஏத்தினது எந்த வகையில் சேத்தி?
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
30-அக்-201900:07:56 IST Report Abuse
uthappaஅது வேறே தொழில்....
Rate this:
Cancel
kamal -  ( Posted via: Dinamalar Android App )
29-அக்-201920:57:31 IST Report Abuse
kamal மிகவும் அழுகிய நிலையில் மீட்க பட்டது என்றால் ஏன் யாருமே mask அணியவில்லை. தவிர சிறுவனின் உடலை யாருமே பார்க்கவில்லை. ஒரு நீல நிற கவர் மட்டும் கொண்டுசெல்லப்பட்டது, பின்னர் அது பெட்டியில் வைக்கப்பட்டு சவக்குழிக்குள் இறக்கப்பட்டது. 88 மணி நேரம் எடுக்க முடியாத சிறுவன், மாண்டுவிட்டான் என்று சொல்லிய 90 நிமிடத்தில் எப்படி மீட்கப்பட்டான். அந்த சிறப்பு கருவி என்ன?. உண்மையிலேயே சிறுவனின் உடல் மீட்கப்பட்டதா அல்லது அவன் உடலையும் சேர்த்து ஆழ்துளை கிணறை மூடிவிட்டார்களா?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X