சுஜித் உடல் நல்லடக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுஜித் உடல் நல்லடக்கம்

Updated : அக் 30, 2019 | Added : அக் 29, 2019 | கருத்துகள் (39)
Share
ஆழ்துளை கிணறு, சுஜித், பிரேத பரிசோதனை, அஞ்சலி, உடல், நடுக்காட்டுப்பட்டி,dinamalar,தினமலர்

இந்த செய்தியை கேட்க

திருச்சி : ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பொது மக்கள், உறவினர்கள் அஞ்சலிக்கு பின்னர், பாத்திமாபுதூர் கல்லறையில் சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


latest tamil newsதிருச்சி மாவட்டம் மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், 5 நாட்களுக்கு பின் இன்று (அக்.,29) அதிகாலையில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


latest tamil news
பிரேத பரிசோதனை


பிரேத பரிசோதனை முடிந்தபின், சவப்பெட்டியில் வைத்து எடுத்து வரப்பட்ட சுஜித்தின் உடலுக்கு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, உதயகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil newsகுழந்தையின் பெற்றோர் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்கடித்தது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. நடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள புதூர் கல்லறையில் சுஜித்தின் உடலுக்கு உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். பிரார்த்தனை நடந்தது. இதன் பின்னர், சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X