அரசியல் கட்சிகளே; மரண போர்வெல்களை மூட ஏற்பாடு செய்யுங்கள்

Updated : அக் 31, 2019 | Added : அக் 29, 2019 | கருத்துகள் (130)
Advertisement
வாசகர்களே!மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி குழந்தை சுஜித்தின் அகாலமரணம் மனிதநேயம் உள்ள அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது. தண்ணீருக்காக போடப்பட்ட போர்வெல் கண்ணீரை வரவழைக்கும் எமனாக மாறியுள்ளது. இதில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ன பாடம் கற்றுக் கொள்ள போகிறோம்?அரசியல் கட்சிகளே, இளைஞர் அமைப்புகளே, பொதுநல இயக்கங்களே, ரசிகர்
RIPSujith, சுஜித்போர்வெல், மரண போர்வெல், தினமலர், dinamalar,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாசகர்களே!
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி குழந்தை சுஜித்தின் அகாலமரணம் மனிதநேயம் உள்ள அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது. தண்ணீருக்காக போடப்பட்ட போர்வெல் கண்ணீரை வரவழைக்கும் எமனாக மாறியுள்ளது. இதில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ன பாடம் கற்றுக் கொள்ள போகிறோம்?

அரசியல் கட்சிகளே, இளைஞர் அமைப்புகளே, பொதுநல இயக்கங்களே, ரசிகர் நற்பணி மன்றங்களே, நுகர்வோர் அமைப்புகளே, மனித உரிமை ஆர்வலர்களே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களே உங்கள் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத மூடப்படாத அபாயகரமான ஆழ்துளை கிணறுகள் குறித்த விபரங்களை உடனடியாக உங்கள் பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், போலீஸ், தீயணைப்பு அதிகாரிகளிடம் தெரிவித்து உயிரிழப்பை தவிர்க்க உதவிடுங்கள். சிறுவன் சுஜித்திற்கு ஏற்பட்ட நிலைமை இனிமேல் இன்னொரு குழந்தைக்கு ஏற்படக்கூடாது. இப்படி ஒரு சம்பவம் இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று சபதம் எடுப்போம். உங்கள் பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் செய்யுங்கள்.
உங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக எண்கள் இதோ:
அரியலூர்: 0451-2461199,0451 2432700
சென்னை: 044-25228025,25234403
கோவை: 0422- 2301114,0422 2222630
கடலூர்: 04142-230999,04142 230666
தர்மபுரி: 04342-230500,04342 232800, 8903891077
திண்டுக்கல்: 04329-228338,04329 228331
ஈரோடு: 0424-2266700,2260207-11,0424 24729494
வாட்ஸ் ஆப் எண்: 944167000
கரூர்: 04324-257555,04324
கிருஷ்ணகிரி : 04343-239500,04343 239400,6369700230
காஞ்சிபுரம்: 044-27237433,
கன்னியாகுமரி: 04652-279555
மதுரை: 04365-252700,
நாமக்கல்: 04286-281101,04286 280111,280222
நாமக்கல் மாவட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1977
நாமக்கல்: வாட்ஸ் ஆப் எண்: 8668246027
நீலகிரி: 0423-2442344,0416 2222000
நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி:9445000912
டோல்ப்ரீ எண்- 1077.
ஊட்டி ஆர்டிஓ சுரேஷ்-9445461804
குன்னூர் ஆர்டிஓ ரஞ்சித் சிங்-9445000438
கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார்-9445000437
பெரம்பலூர்: 04328-225700,04328 224200(R)
புதுக்கோட்டை: 04322-221663,221624-27 (O),04322
ராமநாதபுரம்: 04567-231220,04567 221349
சேலம்: 0427-2330030,0427 2400200
சேலம் மாவட்ட டோல் பிரீ எண்: 1077
சேலம் மாவட்ட பேரிடர் கால மீட்பு பணிகள் கண்காணிப்பு அதிகாரி: 9384056216
சிவகங்கை: 04575-241466,04575 241455
தஞ்சாவூர்: 04362-230102,
தேனி: 04546-253676,04546 254732
திருவள்ளூர்: 044-27661600,044 27662233
திருவண்ணாமலை: 04175-233333,04175 233366
திருவாரூர்: 04366-223344,04366
திருநெல்வேலி: 0462-0462-2501032,0462
திருச்சி:0431-2415358,0431 2420181
திருப்பூர்: 0421-2218811, 0421- 2971199, 2971133
திருப்பூர் மாவட்ட வாட்ஸ் ஆப் எண்: 97000 41114
திருப்பூர் மாவட்ட டோல் ப்ரீ எண்: 1077
தூத்துக்குடி: 0461-2340600,0461
வேலூர்: 0416-2252345, 9444135000
விழுப்புரம் 04146-222450, 04146 222470, 04146-223266
புதுச்சேரி கலெக்டர் அலுவலகம்: 04132299500
விருதுநகர்: 04562-252525,04562 252345Advertisement
வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divahar - tirunelveli,இந்தியா
31-அக்-201916:20:22 IST Report Abuse
Divahar தகுந்த மாதிரி மாறுதல் செய்து மழைநீர் சேகரிக்க பயன்படுத்தலாம்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
31-அக்-201915:59:12 IST Report Abuse
s t rajan அதை மூடாமல் சுஜீத்தை அநியாயமாக கொன்ற பெற்றோரைக் கைது செய்யுங்கள். அந்த குடும்பத்தின் நிலபுலன்களை ஜப்தி செய்யுங்கள். அதை விட்டு விட்டு அந்தக் கொலையாளிகளுக்கு பணக்குவியல் கொடுத்து பாவம் செய்யாதீர்கள். கர்த்தர் மன்னிக்க மாட்டார்.
Rate this:
Cancel
Shan, Ngl -  ( Posted via: Dinamalar Android App )
31-அக்-201915:03:52 IST Report Abuse
Shan, Ngl நான் பார்த்த வரையில் உள்ளதை சொல்கிறேன், தவறாக நினைக்க வேண்டாம். தெருவில் நிறைய தெரு வெறிநாய்கள் இருப்பது தெரிந்தும் இரு சிறு குழந்தைகளை அவர்கள் போக்கில் தெருவில் சுற்றி திரிய விடும் பெற்றோர் எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். வீட்டருகில் மாடிப்படிகட்டு அருகே 3 வயது குழந்தையை சைக்கிள் ஓட்ட விட்டு கண்டுக்காமல் உள்ளே இருந்த பெற்றோர். அந்த குழந்தை படிக்கட்டில் விழுந்த போது ஓடிப்போய் பிடிக்கும் தொலைவில் இல்லை. சத்தம் போட்டு பெற்றோரை அழைத்தும் அவர்களுக்கு கேட்கவில்லை. உள்ளூர் சுற்றுலா தலத்தில் கண்டது. 5 மாத குழந்தைக்கு பவாண்டோவை பால் பாட்டிலில் ஊற்றி கொடுத்தார் குழந்தையின் பாட்டி. நாங்கள் பச்ச குழந்தைக்கு அதைக் கொடுக்காதீர்கள் என்று சொன்னோம். அதற்கு அவர்களோ அசால்டாக பொவாண்டோ தான் என்கிறார்கள். பொவாண்டோ மட்டும் கார்போனேட்டட் டட்ரிங் இல்லையா என்று கேட்டுவிட்டோம். தாய்ப்பால் மட்டுமே குடிக்க வேண்டிய பச்சிளம் தளிருக்கு நஞ்சை கொடுக்கிறார்களே. குழந்தை பசியால் அழுதால் பக்கத்திலேயே 10 அடித் தொலைவில் டீக்கடை இருந்தது. நினைத்தால் பால் வாங்கி இருக்கலாம். பெண்கள் உடைமாற்றும் அறையும் அருகிலேயே இருந்தது. தாய்ப்பால் ஊட்டியிருக்க முடியும். ஆனால் அவர்களோ அருவியில் குளிக்கும் ஆவலில் பிஞ்சுக்கு நஞ்சை ஊட்டியிருக்கிறார்கள். இப்படியும் அறியாமையில் பலர் சிக்கியிருக்கிறார்கள் என்று நினைத்தால் நெஞ்சம் வலிக்கிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்கள் எல்லோரும் மதசார்பற்ற மதத்தினர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X