அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுஜீத் குடும்பத்திற்கு நிவாரணம் அரசு ரூ.10 லட்சம் அ.தி.மு.க., ரூ.10 லட்சம்

Updated : அக் 30, 2019 | Added : அக் 29, 2019 | கருத்துகள் (78+ 4)
Advertisement
 சுஜீத், ஆழ்துளை கிணற்றில், குழந்தை,  குடும்பத்திற்கு, நிவாரணம், ஆறுதல், இ.பி.எஸ்

சென்னை:ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சிறுவன் சுஜித் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய்; அ.தி.மு.க., சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த, இரண்டு வயது குழந்தை சுஜீத், பரிதாபமாக இறந்தான். முதல்வர் இ.பி.எஸ்., நேரில் சென்று, சுஜீத் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.


மீட்பு பணிபின், அவர் அளித்த பேட்டி:சுஜீத் வில்சன், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தகவல் கிடைத்ததும், உடனடியாக, அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு பணி மேற்கொள்ள, ஆலோசனை வழங்கினேன். குழந்தையை உயிரோடு மீட்க, விடாமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகளும், மீட்பு பணியில் ஈடுபட்டனர்; அனைத்து தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன.


தவறான குற்றச்சாட்டுதி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதால், உயிரோடு மீட்க முடியவில்லை; ராணுவத்தை அழைக்கவில்லை' என, புகார் கூறியுள்ளார். இது, முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. அரசு, எந்த அளவுக்கு செயல்பட்டது என்பதை, மக்கள் பார்த்து கொண்டிருந்தனர்.

தி.மு.க., ஆட்சியில், 2009 பிப்., 22ல், தேனி மாவட்டம், தோப்புபட்டி கிராமத்தில், ஆறு வயது சிறுவன், ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்; இறந்த நிலையில், சிறுவனை மீட்டனர். அப்போது, எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை; ராணுவத்தை அழைக்கவில்லை. தற்போது, அரசியல் நோக்கோடு, ஸ்டாலின் பேசுகிறார்.

மீட்பு பணி தொடர்பாக, உண்மையை கூறிய, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு நன்றி. இந்த விஷயத்தில், அரசியலை பயன்படுத்தக் கூடாது. அனைவரும் மனசாட்சியோடு நடக்க வேண்டும். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய், அ.தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதுதவிர, தி.மு.க., சார்பில், சுஜீத்தின் பெற்றோரிடம், 10 லட்சம் ரூபாய் நிதியை, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement
வாசகர் கருத்து (78+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
30-அக்-201920:05:14 IST Report Abuse
Charles சுஜித்துக்கு முன் இறந்தவர்களின் குடும்பத்தை மறந்துவிடாதீர்கள். அவர்களும் இதே போல் அரசின் தவறுகளால் தான் தங்கள் குழந்தைகளை தவற விட்டார்கள் விளம்பர முடிவை தவிர்த்து எல்லோரையும் மனிதாபிமானத்தோடு நடத்துங்கள்
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
30-அக்-201921:25:29 IST Report Abuse
uthappaஅவர்கள் எல்லாம் கிருத்துவர்களாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருந்தால் லிஸ்ட் அனுப்புங்க, செய்துடறோம்.வெட்கம் கேட்ட அரசும், போலி மதசார்பற்ற அரசியல்வாதிகளும்....
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
30-அக்-201919:46:33 IST Report Abuse
vbs manian தவறு செய்த பெற்றோருக்கு நிவாரணம். தமிழ் நாட்டில்தான் இந்த காமெடி நடக்கும்.
Rate this:
Share this comment
Charles - Burnaby,கனடா
30-அக்-201921:10:16 IST Report Abuse
Charlesதவறு செய்தது அரசும் மற்றும் அதிகாரிகளும்.. பெற்றோர் அதற்கப்புறம் தான். அதை மழுப்பத்தான் பணம் அதுவும் மக்களுடையதே...
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
31-அக்-201903:28:40 IST Report Abuse
uthappaஅரசு தான் பயன்படாத ஆழ்துளை கிணற்றின் வாயை மூடாதே என்று சொல்லியதா? அல்லது அறுபது ஆண்டுகளின் ஆட்சியில் மலிந்து விட்ட அரசு அதிகாரிகளின் கவனிக்க தவறிய செயலா? ஒருவன் தன் தோட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு சொல்லாமல் ஆழ் துளை கிணறு வெட்டி, அது பயன்பாடாது என்று தெரிந்தும் மூடாமல் விட்டது அரசு அதிகாரிகளின் கவனிப்பின்மையா? தற்கொலை செய்ய போனவன் தப்பித்து விட்டாலே அவனை குற்றவாளி என்று தண்டிக்கலாம், இவனோ இவனின் கவன குறைவால் ஒரு வளரும் பிஞ்சை கொன்று விட்டவன். குழந்தை பாவம் என்ன பாபம் செய்தது, இவனுக்கு பிறந்ததை தவிர....
Rate this:
Share this comment
Cancel
Chichu Damal - Panama,பனாமா
30-அக்-201919:37:03 IST Report Abuse
Chichu Damal வாட்சப்பில் வந்தது, நியாயமானது: தண்டிக்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பற்ற பெற்றோரின் செயலால்: 1) அரசுக்கு இழப்பு சில கோடிகள், வேலை நேர இழப்பு, 2) அந்த பெற்றோருக்கு குழந்தை இழப்பு (பாவம் அந்த குழந்தைதான், எவ்வளவு வேதனையை அடைந்திருப்பான்?) ஆனால்: 1 ) சில ஊடகங்களுக்கு நேரடி ஒளிபரப்பு என்ற பெயரில் சில ஆயிரம் கோடிகள் லாபம். 2 )முரசொலியில் பஞ்சமி நிலம் மறந்து போச்சு. 3 )நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தோல்வி மறக்கடிக்கப்பட்டது 4 ) தீபாவளி பட்டாசு பண்டிகையை மறக்கடிச்சாச்சு 5 ) அடுத்து நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கலாம் இயக்கத்தை சேர்ந்த பொன்ராஜ் வழக்கு - இந்த விளையாட்டை விடாமல் தொடரலாம் அடுத்த ஒரு பெரிய பிரச்சினை வரும் வரை. எல்லாவற்றுக்கும் மேலாக திமுக எப்படி பணக்கட்டாக பத்து லக்ஷம் கொடுத்தது? எந்த பாங்கில் ட்ராப் செய்தது? எல்லாவற்றுக்கும் மேலாக (இதை எழுதுவதற்கு மன்னிக்கவும் - இறந்த குழந்தைக்கோ, குடும்பத்திற்க்கோ எந்த வகையிலும் அவமரியாதையாக நினைக்கவில்லை) வேறு ஒரு இனத்தார்க்கு இது நடந்திருந்தால் இந்நேரம் அந்த உரிமையாளர் இந்நேரம் ஓன்று தலைமறைவாயிருப்பர் இல்லை கைது செய்து சிறையில் அடைந்திருப்பார்கள். கேவலமான தமிழ்நாடு வெட்கம். வெட்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X