மூடப்பட்டவை 2280 ஆழ்துளை கிணறுகள்! மழைநீர் சேகரிக்கும் வகையில் 600 கிணறுகள் மாற்றம்

Added : அக் 30, 2019 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் மட்டும், 2280 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், மூடப்பட்டுள்ளன. 600 ஆழ்துளை கிணறுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளன.பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம், அவ்வப்போது நடக்கிறது. இதை தவிர்க்க, அத்தகைய ஆழ்துளை கிணறுகளை மூடவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, கோவை
 மூடப்பட்டவை 2280 ஆழ்துளை கிணறுகள்! மழைநீர் சேகரிக்கும் வகையில் 600 கிணறுகள் மாற்றம்

கோவை:கோவை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் மட்டும், 2280 பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், மூடப்பட்டுள்ளன. 600 ஆழ்துளை கிணறுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளன.பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம், அவ்வப்போது நடக்கிறது.
இதை தவிர்க்க, அத்தகைய ஆழ்துளை கிணறுகளை மூடவும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றும் பணிகள், மேற்கொள்ளப்பட்டன.இதில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், 600 ஆழ்துளை கிணறுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில், அரசுக்கு சொந்தமான 1089 ஆழ்துளை கிணறுகளும், தனியாருக்கு சொந்தமான 2021 ஆழ்துளை கிணறுகளும் என, மொத்தம், 3110 பயன்பாடின்றி இருந்தது, 2 ஆண்டுக்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.இவற்றில், 2280 ஆழ்துளை கிணறுகள், மூடப்பட்டு விட்டன. 600 கிணறுகளை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி விட்டனர். மற்றவற்றின் நிலை பற்றி கணக்கெடுத்து, உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி, அந்தந்த பி.டி.ஓ.,க்கள் மூலம், ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதேபோல, பேரூராட்சிகள், நகராட்சிகளில் உள்ள, பயன்பாடற்ற அரசு, தனியார் ஆழ்துளை கிணறுகள், அவற்றில் மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றப்பட்டவை குறித்த விவரங்களை, அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.கோவை கலெக்டர் ராஜாமணி, பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடுவது பற்றி, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முடிவில், அனைத்து ஆழ்துளை கிணறுகளும் உரிய பாதுகாப்புடன் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக ஒரு வாரத்தில் மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில், அரசுக்கு சொந்தமான 1089 ஆழ்துளை கிணறுகளும், தனியாருக்கு சொந்தமான 2021 ஆழ்துளை கிணறுகளும் என, மொத்தம், 3110 பயன்பாடின்றி இருந்தது, 2 ஆண்டுக்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது. இவற்றில், 2280 ஆழ்துளை கிணறுகள், மூடப்பட்டு விட்டன.
600 கிணறுகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றப்பட்டு விட்டன.ஒரே நாளில் 30 புகார்கள்பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் பற்றி தகவல் தெரிவிப்பதற்காக, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், கட்டணம் இல்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1800 599 6000 என்ற அந்த, தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஊழியர்கள், அந்த விவரங்களை குறித்துக் கொள்வர்.இது பற்றிய தகவல்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை வரை, 30 அழைப்புகள் வந்திருந்தன. அவை பற்றிய விவரங்கள், நடவடிக்கைக்காக அந்தந்த உள்ளாட்சி அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
31-அக்-201915:20:42 IST Report Abuse
narayanan iyer ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றுங்கள் . தண்ணீர்தான் மனித தேவை . விவசாயம் செய்ய தண்ணீரவேண்டும் என்றுதானே கிணறு போட்டார்கள் . தண்ணீர் இல்லை என்று கைவிட்டுவிட்டார்கள் . பூமியின் அடியில் தண்ணீரை சேர்த்தால் கிட்டும் .அதைவிடுத்து மூடுகிறேன் என்றால் எப்படி ? பாதுகாப்பு நடவடிக்கை செய்து அத்தனை கிணறுகளையும் நீர்சேமிப்புக்கு பயன்படுத்துங்கள் .அதுதான் அறிவார்ந்த செயல் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X