லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

Added : அக் 30, 2019
Share
Advertisement

மீஞ்சூர்:கட்டட வரைபட அனுமதிக்காக, 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, பி.டி.ஓ., அலுவலக பெண் அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நமசிவாயம், 62. இவர், வீடு கட்டுவதற்காக கட்டட வரைபட அனுமதிக்காக, மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகத்தினை அணுகினார்.அந்த பிரிவில் பணியாற்றும் பெண் அலுவலர் பிரசன்னா, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டு, பின், 4,500 ரூபாய் வழங்கும்,படி தெரிவித்து உள்ளார்.லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நமசிவாயம், இது தொடர்பாக, திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்களது அறிவுரையின்படி, நேற்று மாலை, பி.டி.ஓ., அலுவலகம் வந்த நமசிவாயம், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழங்கப்பட்ட ரசாயனம் தடவிய, 4,500 ரூபாய் பணத்தை பிரசன்னாவிடம் கொடுத்தார்.பிரசன்னா, 38, அதை வாங்கியபோது, டி.எஸ்.பி.,க்கள் சிவபாதசேகரன், குமரவேல் தலைமையில் மறைவில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.மேல் அதிகாரிகளின் வற்புறுத்திலால் லஞ்சம் வாங்கியதாக போலீசாரிடம் பிரசன்னா தெரிவித்ததால், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகளிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X