சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் கொடுமை: கராத்தே பயிற்சியாளர் கைது

Updated : அக் 30, 2019 | Added : அக் 30, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement

கூடலூர் : மாணவிக்கு பாலியல் கொடுமை சர்ச்சை தொடர்பாக, கராத்தே பயிற்சியாளர் உட்பட, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.latest tamil newsநீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே, 11ம் வகுப்பு படித்து வரும், மாணவி கராத்தே பயிற்சி பெற்று வந்தார். 'கராத்தே பயிற்சியாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்,' என, கடந்த ஏப்ரலில் தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.மாணவியின் தாய் பள்ளி நிர்வாகம், அங்குள்ள 'சர்ச்' நிர்வாகத்திடம், புகார் தெரிவித்துள்ளார். மகளின் எதிர்காலம் பாதிக்கும் என மாணவியின் தந்தை, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கடந்த, 27ல் இரவு, கணவர் மற்றும் அவரின் இரண்டு சகோதரர்களிடம், மாணவியின் தாய், தகராறு செய்துள்ளார். அப்போது, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.மாணவியின் தந்தைக்கு ஆதர வாக, நான்கு பேர் அங்கு வந்து பேசியுள்ளனர். அப்போது, குடும்பத்தார் தாக்கியதில்,மாணவியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர், கூடலுார் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


latest tamil newsமாணவியின் தாய் புகாரின் பேரில் கூடலூர் போலீசார் மாணவியின் தந்தை, சித்தப்பாக்கள் இருவர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வந்த நான்கு பேர் என மொத்தம் ஏழு பேரை நேற்று மாலை கைது செய்தனர்.கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மாணவி அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரவீனா வழக்கு பதிவு செய்து, கராத்தே பயிற்சியாளர் சாபு ஆப்ரஹாம் என்பவரை நேற்றிரவு கைது செய்தார்.இன்ஸ்பெக்டர் பிரவீனா கூறுகையில்,''விசாரணை மேற்கொண்டதில், மாணவியை பாலியல் சில்மிஷம் (பாலியல் கொடுமை) செய்தது உறுதியாகி உள்ளது. கராத்தே மாஸ்டர் சாபு ஆப்ரஹாம் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
01-நவ-201912:11:34 IST Report Abuse
Jayvee .........
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
30-அக்-201916:55:21 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி இவன்ங்கள கொள்ளு போடனூம்
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-அக்-201919:30:52 IST Report Abuse
தமிழ்வேல் குதிரைக்குத்தான் கொள்ளு போடுவாங்க நந்தினி... கொன்னுபுடனும் சொல்லுங்க....
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
30-அக்-201916:12:16 IST Report Abuse
pattikkaattaan ஒரு காமாந்தக கராத்தே மாஸ்டர் தவறாக நடந்துள்ளான். மாணவியின் தாய் பள்ளி நிர்வாகம், அங்குள்ள 'சர்ச்' நிர்வாகத்திடம், புகார் தெரிவித்துள்ளார். மகளின் எதிர்காலம் பாதிக்கும் என மாணவியின் தந்தை, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்போ இவங்களுக்குள்ளேயே சண்டை. போலீசுக்கு போயிருக்கிறார்கள். மாணவியின் அப்பா உருப்படியா இல்லை. சித்தப்பன்களும் உருப்படியில்லை ..
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
30-அக்-201921:56:13 IST Report Abuse
Swaroopa Methaஅம்மாவும் உருப்படி இல்லை. போலீஸ்ல பிராது குடுக்காம சர்ச்சுக்கு போக வேண்டிய அவசியம் என்ன… சர்ச் மூலம் கட்டப் பஞ்சாயத்து பண்ணி ஏதாவது காசு - இழப்பீடு கிடைக்கும்னுதான்...
Rate this:
Anandan - chennai,இந்தியா
31-அக்-201906:42:30 IST Report Abuse
Anandanகற்பழிப்பு ஆட்களுக்கு ஊர்வலம் போன கும்பல் சொன்னா சரியாதான் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கும் யோக்கியங்கள் ரொம்ப யோக்கியர்கள் போல கருத்து சொல்ராங்க பாருங்க அடேங்கப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X