போலீசுக்கு டிரான்ஸ்பரு... பிரியாணி கடைக்காரர் ஆர்டரு!

Added : அக் 30, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
தீபாவளி பண்டிகைக்கு எடுத்திருந்த, 'லாங் மிடி' அணிந்திருந்த சித்ரா, வீட்டுக்கு முன், புஸ்வாணம் வைத்துக் கொண்டிருந்தாள்.வீட்டில் செய்த தேங்காய் பர்பி, அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை எடுத்துக் கொண்டு, புது டிசைனில் அறிமுகமாகி இருந்த, பளீர் நிற, 'டாப்ஸ்' அணிந்து வந்த மித்ரா, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டே, பட்டாசு வெடிக்க ஆரம்பித்தாள்.''என்னப்பா, பலகாரம்
போலீசுக்கு டிரான்ஸ்பரு...  பிரியாணி கடைக்காரர் ஆர்டரு!தீபாவளி பண்டிகைக்கு எடுத்திருந்த, 'லாங் மிடி' அணிந்திருந்த சித்ரா, வீட்டுக்கு முன், புஸ்வாணம் வைத்துக் கொண்டிருந்தாள்.வீட்டில் செய்த தேங்காய் பர்பி, அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை எடுத்துக் கொண்டு, புது டிசைனில் அறிமுகமாகி இருந்த, பளீர் நிற, 'டாப்ஸ்' அணிந்து வந்த மித்ரா, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டே, பட்டாசு வெடிக்க ஆரம்பித்தாள்.

''என்னப்பா, பலகாரம் தடபுடலா இருக்கே,'' என, ஆரம்பித்தாள் சித்ரா.

''ஆமாக்கா, இந்த வருஷம் கடையில வாங்கலை; வீட்டிலேயே செஞ்சிட்டோம்,'' என்றவாறு, ''அரசாங்க அதிகாரிங்க அலறியடிச்சு ஓடிட்டாங்களாமே...'' என, நோண்டினாள் மித்ரா.

''அதுவா, பெ.நா.பாளையம் ஒன்றிய பி.டி.ஓ.,வை, கலெக்டர் ஆபீசுல லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடிச்சாங்கள்ல, அதனால, மத்த துறை அதிகாரிங்க ரொம்பவே 'அலார்ட்' ஆகிட்டாங்க. கார்ப்பரேஷன் ஆபீசர்களை குறி வச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டதும், துறை தலைவர்கள் ஆபீஸ் பக்கம் எட்டி கூட பார்க்கலை,''
''இருந்தாலும், பண பட்டுவாடா ஜோரா நடந்துச்சுன்னு கேள்விப்பட்டேனே...''
''வழக்கமா, கான்ட்ராக்ட்காரங்களோட 'பில்'களை நிறுத்தி வச்சிருவாங்க. பண்டிகை சமயத்துல, 'கிளீயர்' செய்வாங்க. ஒவ்வொரு அதிகாரிக்கும், பெரிய தொகை கமிஷனா கெடைக்கும். ஒவ்வொரு 'பில்'லுக்கும், 10 சதவீதம் கமிஷனாம். கீழ்நிலை ஊழியரில் இருந்து 'செக்' கொடுக்கறவர் வரைக்கும் பங்கு போகுமாம். ஒரே நாள்ல ரூ.70 கோடி பட்டுவாடா செஞ்சிருக்காங்களாம். குறைந்த பட்சமா, ஒரு அதிகாரிக்கு ரூ.35 லட்சம் கெடைச்சிருக்காம்...''

''என்னக்கா சொல்றீங்க... சங்கு சக்கரம் மாதிரி, தலை சுத்துதே...'' என்றபடி, சங்கு சக்கரத்தை பற்ற வைத்தாள் மித்ரா.

''கார்ப்பரேஷன்ல ஏகப்பட்ட வேலை நடக்குது. இதுல, செல்வாக்குள்ள கான்ட்ராக்ட்காரங்களுக்கு ஒடனே, 'பில்' தொகை கெடைக்குதாம். கான்ட்ராக்ட் வேலை செய்யற கட்சிக்காரங்களுக்கு ஆறு மாசத்துக்குள்ள கொடுக்குறாங்களாம். மத்தவங்களுக்கு ஒரு வருஷம் வரைக்கும் இழுத்தடிக்கிறாங்களாம். அதுவும் கமிஷன் இல்லாம, 'செக்' கெடைக்கவே கெடைக்காதாம்,''
''இந்த வருஷம், சேலம் போறதுக்கு கொடிசியா பக்கத்துல தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைச்சிருந்தாங்களே... பயணிகளுக்கு சிரமம் இல்லாம இருந்திருக்கும்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''சந்தோஷமான விஷயம்தான். ஆனா, அரசு பஸ்களை மட்டுமே நிறுத்தியிருந்தாங்க. ஆம்னி பஸ்கள் வழக்கம்போல காந்திபுரத்துல இருந்தே கெளம்புனதால, போக்குவரத்து நெருக்கடி குறையல. 'கொடிசியா' பக்கத்துல போட்டிருந்த தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பலருக்கும் தெரியாததால, தனியார் ஆம்னி பஸ்சுல நெறைய பேரு போனாங்க. 'டிராபிக்'கை குறைக்க அதிகாரிங்க, நல்ல யோசனை செஞ்சிருக்காங்க. ஆனா, செயல்படுத்துறதுல கோட்ட விட்டுட்டாங்க...,'' என்றபடி, கம்பி மத்தாப்பு சுழற்றினாள் சித்ரா.

''ஆமாக்கா, நீங்க சொல்றதும் சரிதான். ஆம்னி பஸ்களையும் கொடிசியாவுக்கு மாத்தியிருக்கணும். வெள்ளலுார்ல சீக்கிரமா பஸ் ஸ்டாண்ட் கட்டுனால, இதுக்கு தீர்வு கெடைச்சிடும்,''

''எஜூகேஷன் அதிகாரி, கண்டுக்காம இருக்கறதுனால, பிரைவேட் ஸ்கூல் நிர்வாகிங்க புலம்புறாங்களாமே...''
''ஆமா, நானும் கேள்விப்பட்டேன். உண்மைதான். மாவட்ட கல்வி அலுவலகத்தில், ஸ்கூல்களுக்கு அங்கீகாரம் வழங்குறது ஆசிரியர்களுக்கு சலுகை கொடுக்குறது சம்பந்தமா எப்போதுமே பேரம் பேசுவாங்க. அங்க இருக்கற 'லேடி' உயரதிகாரிக்கு, இன்னொரு 'லேடி' அதிகாரி இவ்ளோ நாளும் உறுதுணையா இருந்து, வசூல் வேட்டையில ஈடுபட்டுட்டு இருந்திருக்காங்க.

''கொஞ்ச நாளா, வசூல் அதிகாரி திரும்பிட்டாங்களாம். அதனால, அவரை வேறிடத்துக்கு மாத்துறதக்கு உயரதிகாரி முயற்சி செஞ்சிட்டு இருக்காராம். இது எதுவுமே தெரியாதது மாதிரி, பெரிய்ய அதிகாரி செயல்படுறாராம். இவங்களுக்குள்ள இருக்கிற பிரச்னைனால, அங்கீகாரம் கெடைக்கிறது இல்லையாம். அதனால், ஸ்கூல்காரங்க புலம்பிட்டு இருக்காங்க,''
''அதெல்லாம் சரி, கார்ப்பரேஷன்ல வசூல் வேட்டையில இருந்த, 'லேடி' அதிகாரி, 'லீவு'ல இருக்காங்களாமே...''''லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பு வளையத்துக்குள்ள இருக்காங்களே, அவுங்கதான், 'லீவு'ல போயிருக்காங்க,''
''இந்த வருஷம் ரேஷன் கடை ஊழியர்கள் ரொம்பவே சந்தோசப்பட்டாங்களாமே...'' என, 'ரூட்'டை மாற்றினாள் சித்ரா

.''அது, வேறொன்றுமில்லை. போனஸ் தொகையையும், சரண்டர் லீவையும் கணக்கிட்டு, ஒரே நாள்ல ஊழியர்களது வங்கி கணக்குல வரவு வச்சிட்டாங்க. பண்டிகை கொண்டாட்டத்துக்கு தேவையான பணம் கெடைச்சதுனால, ரொம்ப சந்தோஷப்பட்டாங்க,'' என்றவாறு, கை கால்களை கழுவி விட்டு, ''இன்னைக்கு என்ன ஸ்பெஷல்'' என, கேட்படி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.

பூரி, சிக்கன் குழம்பு, மட்டன் வருவல், அவித்த முட்டை என, உணவு அயிட்டங்களை, டைனிங் டேபிளில் பரப்பினாள் சித்ரா.

''ஏகப்பட்ட டிஷ் செஞ்சிருக்கீங்களே...'' என்றபடி, ஒவ்வொன்றாய் சுவைக்க ஆரம்பித்த மித்ரா, ''மட்டன் பிரியாணி செஞ்சிருந்தா இன்னும் அருமையா இருந்துருக்குமே...'' என்றாள்.

''பக்கத்து வீட்டு 'குழந்தை'க்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும். மத்தியானதுக்கு செய்றதா பிளான் போட்டிருக்கேன்,''

''பிரியாணின்னு சொன்னதும், எனக்கொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. போலீஸ்காரங்க, 'டிரான்ஸ்பரை', பிரியாணி கடைக்காரர் ஒருத்தரு முடிச்சுக் கொடுக்குறாராம். வைசியாள் வீதிக்கு பக்கத்துல இருக்கற அந்த பிரியாணி கடை, போலீஸ் அதிகாரிங்க மத்தியில ரொம்ப பேமஸ். ரூரல் லிமிட்டுல எந்த ஒரு பஞ்சாயத்தா இருந்தாலும், அந்த கடைக்காரரிடம் சொன்னா போதுமாம்; கனகச்சிதமா செஞ்சு கொடுத்துருவாராம். அந்தளவுக்கு செல்வாக்கு உள்ளவரா இருக்காராம்,''

''அதெல்லாம் சரி, போராட்டம் செய்றதுக்கு ஒரு குரூப் தயாராகிட்டு இருக்காமே...'' என, இழுத்தாள் சித்ரா.

''ஆமாக்கா, கோவைப்புதுார் சுத்துவட்டாரத்துல பாதாள சாக்கடை குழாய் பதிக்கிறதுக்கு குழி தோண்டியிருக்காங்க. இதுவரைக்கும் மறுபடியும் ரோடு போட்டுக்கொடுக்கல. பல தடவை சொல்லியும், அதிகாரிங்க கேக்காததால, மறியல் போராட்டம் நடத்துறதுக்கு பிளான் போட்டுட்டு இருக்காங்க. இது சம்பந்தமா, 'வாட்ஸ்ஆப்' குரூப்புல வேகமா தகவல் பரவிட்டு இருக்கு,''

''காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டுக்குள்ள புதுசா ஆரம்பிச்சிருக்கிற, 'டாஸ்மாக்' கடையை மூடவே இல்லையே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''அக்கா, அந்த ஏரியாவுல மொத்தம் நாலு கடை இருக்கு; பஸ் ஸ்டாண்ட்டுக்குள்ள மட்டும் ரெண்டு கடை இருக்கு. ஆளுங்கட்சிக்காரங்க கட்டுப்பாட்டுல, 'பார்' செயல்படுறதுனால, நடவடிக்கை எடுக்குறதுக்கு, அதிகாரிங்க ரொம்பவே தயக்கம் காட்டுறாங்க,''

''மித்து, நம்மூர்ல இருக்கற அதிகாரிங்க எப்பவுமே அப்படித்தான். ஆளுங்கட்சி பெயரை சொன்னாலே, எட்டடி தள்ளி நிக்குறாங்க,'' என்ற சித்ரா, ''அதிகமா மது அருந்தியதால, நாலு பேர் இறந்துட்டாங்களாம்,'' என்றாள்.

''ஆமா, கேள்விப்பட்டேன். பண்டிகை நேரத்துல போலி சரக்கையும் கலந்துட்டாங்க போலிருக்கு. முறைகேடா, அனுமதியில்லாம, குனியமுத்துார், ஒத்தக்கால் மண்டபம் உள்ளிட்ட பல இடங்கள்ல, 'டாஸ்மாக் - பார்' நடக்குதாம்,'' என்றபடி, 'டிவி'யை 'ஆன்' செய்தாள் மித்ரா.

மணப்பாறையில், போர்வெல் குழியில் சிக்கிய சிறுவன் சுஜித்தை மீட்பது தொடர்பாக, தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பேசியதாக, பிரதமர் மோடி 'ட்விட்' செய்திருந்த செய்தி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதைப்பார்த்து, 'உச்' கொட்டிய சித்ரா, ''நம்மூரிலும், பயன்படாத 'போர்வெல்' இருந்தா, உடனடியா மூடச்சொல்லி, கார்ப்பரேஷன் நிர்வாகம் உத்தரவு போட்டிருக்கு. எங்காவது இருந்தா, 1800-599-6000 என்ற 'டோல் ப்ரீ' எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்னு, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுருக்கு. இனியாவது, விழிப்புணர்வோடு செயல்பட்டா நல்லா இருக்கும்,'' என்றாள்.

''போர்வெல் போடுறதுக்கு ஏற்கனவே தடை இருக்கு. அதை மீறித்தானே, ஏகப்பட்ட இடங்கள்ல போடுறாங்க. நம்மூர்ல இருக்க குளங்கள்ல மீன் பிடிக்க தடை இருக்கு. ஆனா, அதை மீறித்தான் பிடிக்கிறாங்க,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.

''ஆமா மித்து, சிங்காநல்லுார் குளத்துல அறிவிப்பு பலகை கூட வச்சிருக்காங்க. தி.மு.க.,வை சேர்ந்தவரு மீன் பிடிக்கிறாரு; மாவட்ட நிர்வாகம் கண்டுக்காம இருக்கு,''''இதே மாதிரி தான், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையும் அமோகமா நடக்குது; அதிகாரிங்க, வேடிக்கை பார்த்துட்டு தானே இருக்காங்க,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.

''ஆமாக்கா, ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை கோவையில ஏதாவது ஒரு குடோனுல, 'டன்' கணக்குல 'பான்மசாலா' பொருட்கள் சிக்கிட்டு இருக்கு. உணவு பாதுகாப்பு துறை, போலீஸ் தயவுல பல இடங்கள்ல விற்பனை ஜோரா நடக்குது. வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் போன்ற வடமாநிலத்தவர் வசிக்கிற இடங்கள் ரகசிய குடோன் செயல்படுதாம். இங்கிருந்தே மளிகை கடை, பெட்டி கடைகளுக்கு பான்மசாலா பாக்கெட்டுகள் சப்ளை செய்றாங்களாம்.

''இப்ப, செல்வபுரம் லிமிட்டுல, ஒன்றரை 'டன்' சிக்குன விவகாரத்துல, வாகாராம் என்ற நபரை கைது செய்திருக்காங்க. அவரு, பான்மசாலா தொழில்ல மிகப்பெரிய 'கை'யாம். கவனிக்கிற விதத்துல கவனிச்சா, போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் யார் யாருக்கு தொடர்பு இருக்குன்னு தெரிஞ்சிடுமாம். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்,'' என்றபடி, மீண்டும் பட்டாசு வெடிக்க புறப்பட்ட்டாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-நவ-201914:14:17 IST Report Abuse
Malick Raja அன்று என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாட்டு பாடினார்கள் .ஆனால் இன்று .. என்று தணியும் இந்த லஞ்சத்தின் தாக்கம் .. என்று தணியும் இந்த லஞ்சம் என்று பாடுமளவுக்கு இருப்பது வேதனைக்குரியதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X