பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரமானது மஹா புயல்

Updated : அக் 31, 2019 | Added : அக் 31, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: அரபிக்கடல் பகுதியில் உருவான மஹா புயல், தீவிரமானது. இதனால், தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், அரபி கடல் பகுதியில் உருவான மஹா புயல் இன்று(அக்.,31) லட்சத்தீவு பகுதியில் நிலவுகிறது. தற்போது அமினி தீவுக்கு வடகிழக்கே 40 கி.மீ., தொலைவில் நிலை
மஹா புயல், சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம்,  தென்மாவட்டங்கள், கனமழை, மழை, rain, storm, weather,

இந்த செய்தியை கேட்க

சென்னை: அரபிக்கடல் பகுதியில் உருவான மஹா புயல், தீவிரமானது. இதனால், தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், அரபி கடல் பகுதியில் உருவான மஹா புயல் இன்று(அக்.,31) லட்சத்தீவு பகுதியில் நிலவுகிறது. தற்போது அமினி தீவுக்கு வடகிழக்கே 40 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. வடக்கு திசையில் லட்சத்தீவுகள் நோக்கி நகரக்கூடும். இந்த புயல், இன்று மதியம் அதி தீவிர புயலாக வலுப்பெறும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். 33 இடங்களில் கனமழையும், 4 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குன்னூரில் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


latest tamil news



அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வடமாவட்டங்களான ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை நகர் மற்றும் புறநகரில் லேசான மழை பெய்யக்கூடும்.

மாலத்தீவு, கேரளா கடற்கரை பகுதிகளுக்கு இன்றும்(அக்.,31), லட்சத்தீவு பகுதிக்கு இன்றும் நாளை(நவ.,1) செல்ல வேண்டாம்.

மேலும், தற்போதைய நிலவரப்படி நவ., 4 அன்று, வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, வட மேற்கு திசையில் மத்திய வங்கக்கடலில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். வடக்கு அந்தமான் கடல்பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு நவ.,4 மற்றும் 5 தேதிகளில் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saraswathi - Chennai,இந்தியா
31-அக்-201915:26:13 IST Report Abuse
saraswathi மக்களின் தேவை எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ நிவர்த்தி செய்யாமல் அதுவரைக்கும் அரசியல் வியாதிகளின் பொழப்பு இருக்கும். எப்போ மக்களின் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறதோ அன்று உண்மையான அரசியல் வாதிகள் பொழப்பு இருக்கும்
Rate this:
Cancel
Kudandhaiyaar - kumbakonam,இந்தியா
31-அக்-201914:42:54 IST Report Abuse
Kudandhaiyaar திராவிட கட்சிகள் தூர் வாரப்படும் வரை தண்ணீர் பஞ்சமே. எந்த ஒரு கட்சியாவது இது பற்றி பேசுகிறார்களா அல்லது அறிக்கை விட்டிருக்கிறார்களா என ஒரு முப்பது வருட வரலாறை புரட்டி பாருங்களேன்.
Rate this:
A P - chennai,இந்தியா
31-அக்-201921:17:04 IST Report Abuse
A Pகொள்ளைக்கார அரசியல்வாதிகளின் மற்றும் அவர்களின் பினாமிகளின் இடங்களில் தூர் வாரி அந்தப் பணத்தில் எல்லா ஏரிகளையும் தூர் வாரினால்தான் நாமெல்லாம் தண்ணீரைப் பல காலம் பார்க்கலாம்....
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
31-அக்-201914:00:30 IST Report Abuse
சீனி ஏரிகள் முறையாக தூர்வாரப்பட்டிருந்தால், இந்த நீரை அடுத்த கோடைவரை சேமிக்க முடியும்.
Rate this:
Bullet Raja Gounder - Rasipuram, Namakkal,இந்தியா
31-அக்-201915:14:46 IST Report Abuse
Bullet Raja Gounder சும்மா இரு பா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X