ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்

Updated : நவ 02, 2019 | Added : அக் 31, 2019 | கருத்துகள் (7) | |
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்து நேற்றுடன் முடிவுக்கு வந்தது; இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் உதயமாகின. இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும், துணை நிலை கவர்னர்கள் நேற்று பதவியேற்றனர். நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின், 370வது பிரிவின் கீழ், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, ஆகஸ்ட், 5ல்,
ஜம்மு - காஷ்மீர், லடாக், யூனியன் பிரதேசங்கள்,உதயம், துணை நிலை, கவர்னர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்து நேற்றுடன் முடிவுக்கு வந்தது; இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் உதயமாகின. இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும், துணை நிலை கவர்னர்கள் நேற்று பதவியேற்றனர்.

நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின், 370வது பிரிவின் கீழ், ஜம்மு - காஷ்மீர்

மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, ஆகஸ்ட், 5ல், மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதற்கு, காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து,

போராட்டங்களை நடத்தின.
உத்தரவுஇதையடுத்து, காஷ்மீர் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்

பட்டதால், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லடாக், ஜம்மு - காஷ்மீர் என, இரண்டு யூனியன்

பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேச

மாகவும், லடாக், சட்டசபையில்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என்றும்

அறிவிக்கப்பட்டது.மத்திய அரசின் உத்தரவு வெளியாகி மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், ஜம்மு -

காஷ்மீரின் மாநில அந்தஸ்து, நேற்றுடன் முடிவுக்கு வந்ததாகவும், அங்கு அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்ததாகவும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அறிவிப்பு

வெளியிட்டார்.இது தொடர்பாக, இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் தனித் தனி அறிவிப்புகளை, ஜனாதிபதி வெளியிட்டார்.இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னராக கிருஷ்
சந்திரா மர்முவும், லடாக்கின் துணை நிலை கவர்னராக ராதாகிருஷ்ண மாத்துாரும், நேற்று
பதவியேற்றனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வை அடுத்து, நம் நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை, 29லிருந்து, 28 ஆக குறைந்துள்ளது.
கட்டுப்பாடுஅதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை, ஏழில் இருந்த ஒன்பதாக அதிகரித்து உள்ளது. ஒரு மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதும் இது தான் முதல் முறை. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு, சட்டசபை அமைக்கும் நடைமுறைகளும், தொகுதி வரையறை பணிகளும் விரைவில் துவங்கஉள்ளன. இந்த யூனியன் பிரதேசத்தின்

சட்டம் - ஒழுங்கு, போலீஸ் நிர்வாகம் ஆகியவை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில்

செயல்படும்.அதேநேரத்தில், நிலம் தொடர்பான விஷயங்கள், பல்வேறு துறைகளின் நிர்வாகம் ஆகியவை

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்படும். லடாக் யூனியன்

பிரதேசத்தின் ஒட்டு மொத்த நிர்வாகமும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும். சண்டிகர் யூனியன் பிரதேசத்தை போல், லடாக்கிலும் சட்டசபை இருக்காது.ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும், தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்பட்டாலும், அவற்றின் முழு கட்டுப்பாடும், துணை நிலை கவர்னர்கள் மூலமாக, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.தனி யூனியன் பிரதேசங்கள் மலர்ந்துள்ளதை அடுத்து, ஜம்மு - காஷ்மீரில், கடந்த ஆகஸ்ட் முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், பெரும்பலான பகுதிகளில் தளர்த்தப்பட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இணைய சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத அமைப்புகளின் போராட்டம் காரணமாக, பெரும்பாலான இடங்களில், நேற்று கடைகள்

அடைக்கப்படட்டிருந்தன. போக்குவரத்தும் மிகவும் குறைவாகவே இருந்தது.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துஅளித்த, 370வது சட்டப்பிரிவு, பயங்கரவாதத்தின் நுழைவு வாயிலாக இருந்தது. அந்தசட்டப்பிரிவை ரத்து செய்துள்ளதன்மூலம், பிரதமர் மோடி, அந்த நுழைவுவாயிலுக்கு பூட்டு போட்டுஅடைத்துள்ளார்.


அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
01-நவ-201916:40:46 IST Report Abuse
Loganathaiyyan என்னாது ஒரே கிருஷ்ண மயாமாக இருக்கின்றதே இந்த இரண்டு துணை ஆளுநர்கள் பெயரும்? அப்போ மகாபாரதப்போர் முடிவடைந்து விட்டது என்று தெரிகின்றது.
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
01-நவ-201910:06:45 IST Report Abuse
தத்வமசி தனி மாநிலமாக இல்லாமல் யூனியன் பிரதேசமாக இருப்பதால் தீவிரவாதிகள் எல்லை தாண்டி வருவது குறையும் என்று எப்படி என்று விளங்கவில்லை. யாராவது விளக்குங்கள். வேலை வாய்ப்பு இனி நிறையவே வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. காரணம் இனி யாரும் அங்கே தொழில் தொடங்கலாம். பட்டு நூல் தயாரித்தல், குங்குமப்பூ, பழங்கள் இவற்றின் ஏற்றுமதி, பாசுமதி அரிசி, கைவினை பொருட்கள், கம்பளி போன்றவை அதிகமான அளவில் வியாபாரம் நடக்கும். காஷ்மீர் காட்டன் துணி மிக சிறந்தது. பெண்களின் ஆடை அங்கு கிடைப்பது போல வேறு எங்கும் கிடையாது. இனி எல்லோரும் தாராளமாக சென்று வரலாம். லட்டாக்கில் பால் வளம் அதிகம். நமது சரவணா பவனுக்கு அங்கிருந்து தான் சப்ளை. அம்மாதிரி ஒருவரை அங்கே கண்டு உரையாடினேன். தொழில் வளம் பெருகும். ஆனால் வசதிகள் குறைவு. தீவிரவாதம் ஒரு பக்கம் காரணமாக வியாபாரம் பெருகவில்லை. மாநில ஆட்சியின் திறன் பத்தாது. முக்கியமான தொழில் சுற்றுலா. தீவிரவாதம் இருந்தாலும் சுற்றுலா பாதிக்க படவில்லை. இதுவரை அவர்கள் சுற்றுலாவினால் தான் அதிகம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். இனி பல தொழில்களை தொடங்கலாம். வளம் பெருகும். ஆனால் தீவிரவாதம் முழுமையாக அடங்க ஐந்து ஆண்டுகள் வரை விழிப்புடன் அரசு இருக்க வேண்டும். பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் இப்படித்தானே இருந்தது. அதனால் காஷ்மீரும் விரைவில் மாறும் என்று நம்புவோம்.
Rate this:
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
01-நவ-201921:26:57 IST Report Abuse
Ram Ramமுதலில் இருந்த மாநில அரசு கண்டும் காணாத போக்கை கடை பிடித்தது. தனி நாடு என்று கூறி கொண்டு இருந்தால் எல்லா பவிசும் கிடைக்கும் . இப்பொழுது நேரடியாக மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் வருவதால் , ஊடுருவி உள்ளே வந்தால் எளிதில் எதையும் செய்ய முடியாது , மரணம் நிச்சயம் என்னும் நிலை வரும். அதனால் குறையும்...
Rate this:
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
01-நவ-201909:58:12 IST Report Abuse
Aaaaa விரைவில் தமிழ்நாடடையும் யூனியன் பிரதேசமாக அறிவிப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X