சென்னை: ''அரசு ஊழியர்கள் உண்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் முடிக்கப்பட்டுள்ள, 550.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளின் திறப்பு விழா. மேலும், 112.62 கோடி ரூபாய்க்கான புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில், நடந்தது.
திட்டப்பணிகளை துவக்கி வைத்து, முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:நகர கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக, தமிழகம் இருந்தாலும், ஊராட்சி களின் மேம்பாட்டில், அரசு கவனம் செலுத்தி வருகிறது. உள் கட்டமைப்பு, வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம் போன்றவற்றில் கவனம் செலுத்தி, கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு, இந்த அரசு, முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், தொழில் மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிலும், கவனம் செலுத்தப்படுகிறது.
உலக வங்கி உதவியுடன், 918 கோடி ரூபாய் நிதியில், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டத்தை, அரசு செயல்படுத்த உள்ளது.26 மாவட்டங்கள்அதாவது, 26 மாவட்டங்களில் உள்ள, 120 வட்டாரங்கள், 3,994 உள்ளாட்சிகளில், இரண்டு கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் வழியாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண்கள், தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகள் பயனடைவர். இத்திட்டத்திற்காக, இந்தாண்டு, 172 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது;
திட்டத்தை செயல்படுத்த, 552 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவி குழுவினருக்கு, இந்தாண்டு, 12 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை, 5,420 கோடி ரூபாய் கடன் வழங்கப் பட்டுள்ளது. இந்த விழாவில் மட்டும், 150 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், 550.50 கோடி ரூபாய்க்கான, புதிய திட்டங்கள் துவக்கப்பட்டு உள்ளன; 112.62 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டப்படுகிறது.கருணை பணிமாநகராட்சி, நகராட்சிகளில், பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளான, 279 பேருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமண ஆணை வழங்கப்படுகிறது. பணி நியமன ஆணையை பெற்றுள்ளோர், உண்மையாகவும், அர்ப்பணிப்புடனும் மக்களுக்கு பணியாற்றி, அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கிராமங்களை முன்னேற்றும் வகையில், 1994ல், தமிழக ஊராட்சிகள் சட்டத்தை உருவாக்கி, முக்கிய மாற்றங்களை செய்தார்; பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். எதிர்கட்சிகள்ஜெ.,வை தொடர்ந்து, இ.பி.எஸ்.,சும், பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், எதிர்கட்சிகள், தேர்தல் கண்ணோட்டத்துடன், மக்களை திசை திருப்புகின்றன. தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக, செயல்படுத்த முடியாத அறிவிப்புகளை கூறி, நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்வோம் என்கின்றனர். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், வேலுமணி, ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement