அல்பாக்தாதி கொலை: உறுதி செய்தது ஐ.எஸ்.,| Dinamalar

அல்பாக்தாதி கொலை: உறுதி செய்தது ஐ.எஸ்.,

Updated : நவ 01, 2019 | Added : நவ 01, 2019 | கருத்துகள் (20) | |
பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டதையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, சமீபத்தில் அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது. தப்பிக்க முடியாததால், தன் உடலில்
அல்பாக்தாதி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அமெரிக்க ராணுவம், கொலை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டதையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, சமீபத்தில் அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது. தப்பிக்க முடியாததால், தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, அல் பாக்தாதி, தற்கொலை செய்தார்.இதன்பின், பாக்தாதி உடலை, அமெரிக்க ராணுவம், கடலில் துாக்கி வீசி, அடக்கம் செய்தது.


latest tamil news


இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும் அபூஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டதையும் உறுதி செய்துள்ளது.பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக அபூ இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X