பொது செய்தி

இந்தியா

வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு

Updated : நவ 01, 2019 | Added : நவ 01, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி: கடந்த மாதத்தில் வேலை வாய்ப்பின்மைக்கான விகிதம் கணிசமாக 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.






இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5% அதிகரித்துள்ளது. இது 2016ம் ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அடிப்படையில் திரிபுரா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் 20 சதவீதம் கூடுதலாகவே உள்ளது. ராஜஸ்தானில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வேலைவாய்ப்பின்மை இரட்டிப்பாகியுள்ளது.





தமிழ்நாட்டில் விகிதம் முறைப்படி 1.1 சதவீதமாக உள்ளது. சிஎம்ஐஇ தரவுகளின் படி நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.9 சதவீதமாகவும், ஊரக வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாகவும் உள்ளது.

நாட்டில் உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு விகிதம் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பின்மை நீடிப்பது பொருளாதாரத்திற்கு சரியானது அல்ல என்றும் ஒரு ஆய்வறிக்கையின் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. வேளாண் துறையில் வேலைவாய்ப்பு வீழ்ச்சி என்பது 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் 4.5 மில்லியன் பா (மொத்தம் சுமார் 27 மில்லியன்) என்ற விகிதத்தில் உள்ளது. 2011-12 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி துறையில், 3.5 மில்லியன் வேலை வாய்ப்பு சரிவை சந்தித்துள்ளது.






கல்வி நிலை


சில ஆய்வுகளின் படி, கல்வியின் ஒவ்வொரு நிலைக்கும், வேலைவாய்ப்பின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது கல்வியறிவற்றவர்களிடையே 7.1 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. ஆரம்பக் கல்வி வரை கற்ற இளைஞர்களிடையே, 8.3 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை உள்ளது.





உயர்நிலைக் கல்வி முடித்தவர்களிடையே வேலைவாய்ப்பின்மை என்பது 24 சதவீதமாகவும், பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 35.8 சதவீதமாகவும், முதுகலை பட்டதாரிகளிடையேயான வேலைவாய்ப்பின்மை 36.2 சதவீதமாகவும் உள்ளது. அதாவது, கல்வித் தகுதி அதிகரித்தால், வேலைவாய்ப்பின்மையும் அதிகமாக உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-நவ-201921:26:53 IST Report Abuse
Sampath Kumar ஏன் செய்து விட்டர்கள் ?/
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
02-நவ-201911:49:57 IST Report Abuse
Suri மோடியின் ஆட்சி வாழ்க.. அதன் புகழ் ஓங்குக...இதே போல பல செய்திகள் உங்கள் ஆட்சியில் மேலும் பல வரத்தான் செய்யும் என்பது தெரிந்து.. உங்களின் இப்படிப்பட்ட புகழ் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் இந்த திறன் மிக்க ஆட்சியில் GST வசூலும் குறைந்தது என்று செய்தி படித்தேன். இதுவும் உங்கள் ஆட்சியின் மாண்பு மற்றும் மகிமை. இப்படிப்பட்ட மாண்பு மற்றும் மகிமை மிக்க , சிறப்பு மிக்க ஆட்சியின் புகழ் மேலும் ஓங்குக... உங்களை மிஞ்ச வேறு ஒருவர் இத்தாய்த்திருநாட்டில்பிறக்கமாட்டார்கள் /பிறந்திருக்கமாட்டார்கள் என மனதார வேண்டுகிறேன்/நம்புகிறேன் . வாழ்க உங்கள் கொடை.. வளர்க உங்கள் நற்பண்பு...இப்படிப்பட்ட தலைவர்கள் தான் நாட்டுக்கு மேலும் தேவை.. நாடு மேலும் "வளம்" பெற.நீங்கள் மென்மேலும் நாட்டின் தலைப்பு செய்தியை மட்டும் திட்டமிடும் வேலையே மேலும் சீரும் சிறப்புமாக செய்ய மனதார வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-நவ-201909:25:41 IST Report Abuse
Sampath Kumar கொஞ்ச நாளுக்கு முன்பு நாலு மாதத்தில் நாப்பது கோடி வேலை வாய்ப்பு அப்புடின்னு ஒரு செய்தி போட்டிங்க ??/ இப்ப என்ன ஆச்சு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X