மாணவிக்காக நிறுத்தப்பட்ட பஸ் டிரைவர், கண்டக்டருக்கு குவிகிறது பாராட்டு

Added : நவ 02, 2019 | கருத்துகள் (2)
Advertisement

கோட்டயம் : மாணவியின் பாதுகாப்புக்காக, பஸ்சை நிறுத்திய, கேரள அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டரை, பலரும் பாராட்டியுள்ளனர்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. யாரும் இல்லை - இங்குள்ள கண்ணுாரைச் சேர்ந்த, ஜோசப் - எலியம்மா தம்பதியின் மகள் எல்சீனா. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கல்லுாரி ஒன்றில், எம்.பில்., படித்து வருகிறார். தன் படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக, கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு வந்திருந்தார். பின் கோட்டயம் மாவட்டம், கஞ்சிராப்பள்ளியில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டில் தங்குவதற்காக, 29ம் தேதி இரவு, எர்ணாகுளத்திலிருந்து கிளம்பினார்.

இந்த பஸ், இரவு, 11:00 மணிக்கு, கஞ்சிராப்பள்ளியை வந்தடைந்தது. அன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால், கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. எல்சீனாவை அழைத்துச் செல்ல வருவதாக கூறியிருந்த அவரது குடும்ப நண்பரும் வரவில்லை. இதையடுத்து, எல்சீனாவின் குடும்ப நண்பர் வரும் வரை காத்திருக்க, பஸ் டிவைரரும், கண்டக்டரும் முடிவு செய்தனர்.


சமூக வலைதளம்

பஸ்சில் இருந்த மற்ற பயணியரும் இதற்கு சம்மதித்தனர். 15 நிமிடத்துக்குப் பின், எல்சீனாவின் குடும்ப நண்பர், காரில் வந்தார். கண்டக்டர், டிரைவர், மற்றும் பயணியருக்கு நன்றி தெரிவித்து, எல்சீனா நண்பருடன் சென்றார். இந்த சம்பவத்தை அறிந்த, கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் தொகுதியின், எம்.எல்.ஏ.,வான பி.சி.ஜார்க், பஸ் டிரைவர் டென்னிஸ் சேவியர், கண்டக்டர் ஜார்ஜ் ஆகியோரின் மனிதாபிமான செயலை பாராட்டி, சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டார். இந்த சம்பவத்தை வரவேற்றும், டிரைவர் மற்றும் கண்டக்டரை பாராட்டியும், பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
02-நவ-201920:59:44 IST Report Abuse
THINAKAREN KARAMANI நள்ளிரவில் இறக்கிவிட்டுவிட்டு பஸ் புறப்பட்டுச் செல்லாமல் இரவு நேர நிலைமையை உணர்ந்த டிரைவர், கண்டக்டர், பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காத்திருந்து அந்த பெண்ணுக்கு உரியவர் வந்த பின் அவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற இவர்களின் இந்தச் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உதவும் மனம் அனைவரிடமும் என்றென்றும் நிலைத்து இருக்கட்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
02-நவ-201906:06:00 IST Report Abuse
Girija இதுதான் சரியான மக்கள் சேவை வாழ்த்துக்கள் சக பயணிகளுக்கும் சேர்த்து .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X