பொது செய்தி

தமிழ்நாடு

திரைத்துறையினர் ஜாதிய விமர்சனம்; நிர்மலா சீதாராமன் வருத்தம்

Updated : நவ 03, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (44)
Share
Advertisement
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்,ஜாதி,விமர்சனம்,பெப்சி,பொன்விழா,செல்வமணி,தினமலர்,dinamalar

சென்னை: தமிழ் திரைத்துறையை சார்ந்த இருவர், பொது தளங்களில் ஜாதி ரீதியாக தன்னை விமர்சிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, பேரரசு, இசையமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் சந்தித்து பேசினார். பெப்சி அமைப்பின் பொன்விழா கொண்டாட்டத்திற்கான அழைப்பு மற்றும் திரைத்துறை சார்ந்த சில கோரிக்கை களையும் முன் வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வமணி, திரைத்துறையை சார்ந்த இருவர், பொது தளங்களில் தனது ஜாதியை முன்வைத்து விமர்சனம் செய்வது குறித்து அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருத்தப்பட்டார். தயவு செய்து யாரும் இதுபோன்று ஜாதி ரீதியாக பேசாதீர்கள். அரசியலில் தரம்தாழ்ந்த தனிமனித தாக்குதல்கள் கூடாது. குறிப்பாக ஜாதி, மத ரீதியான விமர்சனங்கள், உருவத்தை வைத்து விமர்சனம் செய்வதை கைவிடுங்கள்.

அப்படி இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ந்துவிட்ட நீங்கள் எதையாவது பேசிவிட்டு போய்விடுவீர்கள், திரைத்துறையில் இருக்கும் நாங்கள் கஷ்டப்படுகிறோம், என்றார். அதேசமயம், அமைச்சரை விமர்சித்த அந்த இரண்டு நபர்கள் யார் என்பதை செல்வமணி கடைசிவரை கூறவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
02-நவ-201917:44:56 IST Report Abuse
jagan பிகில் படத்தில் கூட 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' மாதிரி அதே பிள்ளைப்பூச்சி சமூகம் தாக்க பட்டுள்ளது ...இந்த நாடு உருப்படவே உருப்படாது
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
02-நவ-201914:49:35 IST Report Abuse
Naren ஒரு பொது ஊடகத்தில் கருத்து எழுதும் போதே கடுமையான தனி மனித விமர்சனங்களை தாங்கி கொள்ள வேண்டிய மனோபாவம் தேவை எனும் போது மத்திய அமைச்சர் அதுவும் இந்தியாவில் அதல பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கும் ஒரு துறை அமைச்சர் விமர்சனங்களுக்கு உட்பட்டவர் தான். சாதி மற்றும் மதம் அடிப்படையில் அரசியல் செய்யும் போது இதுபோன்ற விமர்சனங்களை பொறுத்து கொள்ள வேண்டியதும் அவசியம் தான்.
Rate this:
SUNDAR - chennai,இந்தியா
02-நவ-201917:13:16 IST Report Abuse
SUNDARஅட பைத்தியம் இன்னும் எதனை காலம் தான் இந்த ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துவார்களோ ?...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-நவ-201914:30:47 IST Report Abuse
Pugazh V தொப்புர் இளமுருகு க்கு என்ன பிரச்சனை? பாஜகவை ஆதரிக்க றதுன்னா செய்து விட்டு போங்க. என் ஜாதி யை ஏன் கேட்க வேண்டும். பொண்ணு குடுக்க போறீங்களா? எனக்கு கல்யாணம் ஆயிடுத்து. இங்கே ப.சிதம்பரம் அவர்களை "செட்டியார், செட்டியார்" என்று உங்கள் கட்சி வாசகர்கள் எழுதிய போது இ.முருகு என்ன செஞ்சுகிட்டு இருந்தீரோ? அவர்களைக் கண்டிக்க துப்பில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X