மாணவிக்காக நிறுத்தப்பட்ட பஸ்; குவிகிறது பாராட்டு

Updated : நவ 02, 2019 | Added : நவ 02, 2019 | கருத்துகள் (58)
Share
Advertisement
கோட்டயம்: மாணவியின் பாதுகாப்புக்காக, பஸ்சை நிறுத்திய, கேரள அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டரை, பலரும் பாராட்டியுள்ளனர்.யாரும் இல்லை:கேரளாவில், உள்ள கண்ணூரைச் சேர்ந்த, ஜோசப் - எலியம்மா தம்பதியின் மகள் எல்சீனா. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில், எம்.பில்., படித்து வருகிறார். தன் படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக, கேரள மாநிலம்,

கோட்டயம்: மாணவியின் பாதுகாப்புக்காக, பஸ்சை நிறுத்திய, கேரள அரசு போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டரை, பலரும் பாராட்டியுள்ளனர்.



latest tamil news




யாரும் இல்லை:


கேரளாவில், உள்ள கண்ணூரைச் சேர்ந்த, ஜோசப் - எலியம்மா தம்பதியின் மகள் எல்சீனா. கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில், எம்.பில்., படித்து வருகிறார். தன் படிப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக, கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு வந்திருந்தார். பின் கோட்டயம் மாவட்டம், கஞ்சிராப்பள்ளியில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டில் தங்குவதற்காக, 29ம் தேதி இரவு, எர்ணாகுளத்திலிருந்து கிளம்பினார்.

இந்த பஸ், இரவு, 11:00 மணிக்கு, கஞ்சிராப்பள்ளியை வந்தடைந்தது. அன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால், கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. எல்சீனாவை அழைத்துச் செல்ல வருவதாக கூறியிருந்த அவரது குடும்ப நண்பரும் வரவில்லை.


latest tamil news



இதையடுத்து, எல்சீனாவின் குடும்ப நண்பர் வரும் வரை காத்திருக்க, பஸ் டிவைரரும், கண்டக்டரும் முடிவு செய்தனர். பஸ்சில் இருந்த மற்ற பயணியரும் இதற்கு சம்மதித்தனர். 15 நிமிடத்துக்குப் பின், எல்சீனாவின் குடும்ப நண்பர், காரில் வந்தார். கண்டக்டர், டிரைவர், மற்றும் பயணியருக்கு நன்றி தெரிவித்து, எல்சீனா நண்பருடன் சென்றார்.

இந்த சம்பவத்தை அறிந்த, கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் தொகுதியின், எம்.எல்.ஏ.,வான பி.சி.ஜார்க், பஸ் டிரைவர் டென்னிஸ் சேவியர், கண்டக்டர் ஜார்ஜ் ஆகியோரின் மனிதாபிமான செயலை பாராட்டி, சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டார். இந்த சம்பவத்தை வரவேற்றும், டிரைவர் மற்றும் கண்டக்டரை பாராட்டியும், பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
06-நவ-201917:09:02 IST Report Abuse
Loganathaiyyan 15 நிமிடத்துக்குப் பின், எல்சீனாவின் குடும்ப நண்பர், காரில் வந்தார். இந்தவரை முதலில் திட்ட வேண்டும். அதே சமயம் அந்த பஸ் டிரைவர்/கண்டக்டர்/பயணிகளுக்கு அவர்கள் காண்பித்த மனித நேயத்திற்கு பாராட்டுக்கள் கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
05-நவ-201917:22:53 IST Report Abuse
Asagh busagh பாராட்டுறது ஒரு பக்கம் இருக்கட்டும். நாடு ஒரு பெண் இரவில் தனியா போக முடியாத நிலைமையில இருக்கிறத நினைச்சு வருத்தபட ஆள் இல்லையா? ஆனா வாசகர்களோ பல சமயங்களில் இந்த எதார்த்தத்தை மறந்து இந்தியா போல வருமான்னு ஓவரா கொண்டாடுறதையும் கைவிடனும்.
Rate this:
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
03-நவ-201908:04:41 IST Report Abuse
s.maria alphonse pandian மலையாளிகள் தங்கள் பண்பாட்டை எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார்கள்... உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆனாலும் அதே லுங்கியைதான் கட்டுவார்கள்... பீடியைதான் குடிப்பார்கள்..ஆப்பம்..புட்டு கடலைக்கறி என அதே உணவைத்தான் சாப்பிடுவார்கள்..ஒரு malaiyaalil..அதே மலையாள மனோரமாவை தான் படிப்பார்கள்..நம்ம ஆட்கள் கொஞ்சம் படித்துவிட்டால் போதும்... வேட்டி கட்டுவதை விட்டு விட்டு அரை டிராயர் போட துவங்குவார்கள்..தமிழ நாளிதழ்களை விட்டு விட்டு ஹிந்து..இந்தியன் எக்ஸ்பிரஸ் என ஆங்கிலத்தில் நுழைந்துவிடுவார்கள்..இட்லியை விட்டு விட்டு பீசா வுக்கு போய்விடுவார்கள்..ஒரு மலையாளி இன்னொரு மலையாளியை சந்தித்தால் மலையாளத்தில்தான் உரையாடுவார்கள்....நம்ம ஆளுங்க அப்படியல்ல..ஆங்கிலத்தில் பேச துவங்கிவிடுவார்கள்..அவ்வளவு ஏன்... வீட்டுக்குள்ளேயே ஆங்கிலத்தில் பேச துவங்கிவிடுவார்கள்..
Rate this:
Saravanan SA - Thni,இந்தியா
03-நவ-201911:38:51 IST Report Abuse
Saravanan SAவாங்க மரிய அல்போன்ஸ் பாண்டியன், நடந்த நிகழ்வில் பெயர்கள் பாருங்கள். எல்சினா, ஜார்க், சேவியர், ஜார்ஜ். எல்லாம் வெளி நாட்டுக்காரன் பேரை வச்சுக்கிட்டு மலையாளத்தை காப்பாத்த கிளம்பிட்டாங்க. இதுக்கு ஒரு சப்ப கட்டு வேற. மலையாளி பூரா காணாமப்போயி ரொம்ப நாளாச்சு. நாங்க இங்கிலீஷ் தான பேசுறோம். தப்பே இல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X